அனைவரிடமும் Conscious Mind (சுய நினைவு) Subconscious Mind (ஆழ்மனம்) என்ற இரு பிரிவுகள் உள்ளன. சுய அறிவுடன் செய்வது, மற்றொன்று நம் ஆழ்மனதிலிருந்து இயல்பாக இயக்கப்படுவது.
Conscious Mind (சுய நினைவு) – ஒருவருடன் பேசுவது, ஒரு செயலைப் புதிதாகச் செய்வது போன்றவை. இவை நம் சுயநினைவுடன் நடப்பவை. ஆழ்மனம் – இவை தொடர் பழக்கங்களினால் ஆழ்மனதில் பதியப்பட்டுத் தானியங்கியாக, நம் முயற்சிகள் இல்லாமலே நடப்பவை. எடுத்துக்காட்டு, பல் துலக்குவது, வாகனம் ஓட்டுவது.பல் துலக்கும் போது வேறு எதையாவது நாம் நினைத்துக்கொண்டு இருந்தாலும், நம் கைகள் தானாகவே அனைத்தையும் செய்கிறது. சுய நினைவில் வாகனம் ஓட்டப்பழகுகிறோம்.
எனவே, பழகும் போது ஒவ்வொரு முறை கியர் போடும் போதும் பொறுப்பாகக் கவனித்து, இயக்கிறோம். ஆனால், பழகி ஆழ்மனதில் இருத்திவிட்டால், கியர், க்ளட்ச், வேகம், நிறுத்தம் அனைத்தையும் தானியங்கியாகவே நம் உடல் செய்யப்பழகி விடுகிறது. அதாவது இதற்காகத் துவக்கத்தில் செய்தது போலக் கூடுதல் முயற்சிகளை எடுக்காமலே நடக்கிறது. காரணம், இவை நம் ஆழ்மனதில் பதிந்து விடுவதால்.
இதன் இன்னொரு பகுதி தான் எண்ணங்கள். நாம் நம்புவதை ஆழ்மனம் நடத்திக்காட்டுகிறது. இதையே ‘நம்பிக்கையே வாழ்க்கை‘, ‘எண்ணம் போல வாழ்க்கை‘ என்கிறார்கள். ஆழ்மனதுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாது. ஆழ்மனம் ஒரு கணினி போல. அதற்கு என்ன பயிற்றுவிக்கப்படுகிறதோ அதைச் செயல்படுத்தும். ஒரு செயலானது நடக்கும் என்று நேர்மறையாக நம்பினால், அதை நடத்திக்காட்டும். ஒரு செயல் நடக்காது என்று எதிர்மறையாக நினைத்தால், அதை நடத்தாது. இதையே தான் ‘என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்‘ என்றார் புத்தர்.
உடல் நலத்தில் பிரச்சனை உள்ளது என்றால், எனக்கு இது சரியாகி விடும், இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடுவேன் என்று ஆழ்மனதை நம்ப வைத்து விட்டால், நம் உடல் பிரச்சனைகளைச் சரி செய்து விடும். மாறாக, எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருந்தால், நம் உடல் நிலையை மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும். நம்பிக்கை என்பது அவநம்பிக்கையாக இருக்கக் கூடாது. முழுமையாக நம்பி ஆழ்மனம் நம்பும்படி செயல்பட்டாலே இதனுடைய பலன்கள் தெரியும். நான் நம்புகிறேன் என்று மேலோட்டமாகக் கூறிக்கொண்டு ஆனால், பயத்துடன், சந்தேகத்துடன் இருந்தால், எதுவுமே நடக்காது. எனவே, முழுமையான நம்பிக்கை மிக முக்கியம்.
Also Read : நீங்க புகைப்பிடிப்பவரா? இந்த 9 உணவும் உங்க ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்! A Diet to Support Smokers!
இப்படி ஆழ்மனத்தின் ஆற்றலை அளவிட முடியாது. நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி – தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தன்னம்பிக்கையில்லாமல் தோல்வி மானப்பான்மையுடன் செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள். எளிமையாகச் சொன்னால், நாம் எதை முழுமையாக நம்புகிறோமோ, அது நடக்கும்.
மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போதே ஆழ்மனதில் நாம் குணமடைவோம் என்று மிக உறுதியுடன் எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். கூடவே முழுமனதுடன் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். நாராயண பட்டாத்ரி தன் தீராத வாத நோயைத் தீர்க்கவேண்டிப் பாடிய நாராயணீயம் காரணமாக அவர் முழுக் குணமானது அறிவீர்கள் அல்லவா? அடி மனதிலிருந்து வந்த பிரார்த்தனைதான் அது.
Also Read : எல்லா நோய்களுக்கும் ஒரே அடிப்படை…! உடலுக்குள்ளே இருக்கும் பார்மஸி!
வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்துதான் உருவெடுக்கிறது. உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது. வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்கள்தான் வெற்றி சிந்தனை, இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாக மாறுகிறது.
ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால், உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும் கூட, விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும். கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம்.
ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி அதற்கு உண்டு. உங்கள் கட்டளையின் எண்ணம் முரண்பாடானால் கிடைப்பதும் முரண்பாடாகவே அமையும். உங்களின் ஆழ்மனசக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும்.
ஒரு குறிக்கோளை அல்லது இலக்கை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும், மற்ற விருப்பு வெறுப்புகளை விலக்கி வைத்துவிட்டு, உறங்குவதற்கு முன் தியானத்திற்கு அமர்வது போன்று சம்மனமிட்டு, சுவாசத்தில் ஆழ்மனம் முழுவதையும் கவனத்தில் குவித்தால் எண்ண அலைகள் அடங்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை உணர்ச்சியுடன், ஒலி நயத்துடன், உதட்டசைவுடன் உருவேற்ற வேண்டும். உங்கள் குறிக்கோள் நிறைவேறிவிட்டது போன்ற நிலையை மனச்சித்திரமாக கற்பனையில் காண வேண்டும்.
இதனை உறங்குவதற்கு முன்பும், உறங்கி எழுந்த பின்னும் தினமும் 30 நிமிடங்கள் கட்டளை கொடுத்தால், உங்கள் ஆழ்மனம் அற்புதமாக செயல்பட தொடங்கிவிடும். ஆழ்மனம் என்பது ஐம்புலன்களால் அறிய இயலாதது, ஆனால் அதன் விளைவை ஐம்புலங்களால் அறிய முடியும். நிறைவேறப் போகிறது என்ற நம்பிக்கையுடன் கட்டளை கொடுங்கள். அப்போது ஆழ்மனத்தின் அற்புத சக்தி வெளிப்படும். நம் வாழ்க்கை என்பது நம் எண்ணத்தால் உருவாக்கப்படுகிறது.
இரவு 9 -10 மணிக்குள் தூங்கி விடுவது நல்லது. காலை 4 – 5 மணிக்கு மனம் அமைதியாக உள்ள நேரத்தில், உடலில் புதுச் செல்கள் உருவாகும் நேரத்தில் நம் இலக்கை உருவேற்றி அழுத்தமாகத் தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது நாம் நினைப்பது கைகூடும். உடல் நலப்பிரச்னைகள் சரியாக வேண்டும் என்று ஆழ்மனதில் பதிய வைக்கும் வகையில் தியானித்தால் உடல் பிரச்சனைகள் சரியாகும்.
எண்ணத்திற்கேற்ப வாழ்க்கை. எண்ணம் என்பது தொடர் மன சித்திரமே. எணணம் – செயல் ஆகிறது, செயல் – பழக்கம் ஆகிறது, பழக்கம் – வழக்கமாகிறது. வழக்கம் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆழ்மனக்கட்டளை , மனச்சித்திரம் இவ்விரு உத்திகளையும் ஒரே சமயத்தில் தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் மனோசக்தி பெருக்கம் அடைகிறது. சிந்தனையிலிருந்து – செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம். எண்ணம் திண்ணம் பெறும்போது நினைத்ததை அடைய முடிகிறது.
ஆழ்மனக்கட்டளையும், மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் – தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப இயலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும்போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள். உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை – தியானம் மூலம் வெற்றி நிச்சயமாகும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry