உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது, நீங்கள் அப்படி நினைக்காதவரை. உண்மைதானே..! அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றை உள்ளே அனுப்புகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள். அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென விருப்பப்பட்டால் மட்டுமே பேசுங்கள். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை காந்தம் போல கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள்.
முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கேன்சர் போன்ற இன்னபிற நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான நோய்கள் உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது.
நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது. கொரானா, காய்ச்சல், நோய்கள் பற்றி துளியளவும் பேசாதீர்கள், அதை பற்றி பற்றி பேசப் பேச, ஷேர் செய்யச் செய்ய தான் நோயும், அதன் பாதிப்பும் அதிகரிக்கிறது.
நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த விருப்பம் இருந்தால் ஆரோக்கியம் பற்றி மட்டும் பேசுங்கள். நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் ஆழமாக நிதானமாக மூச்சு விடுங்கள். நல்ல எண்ணங்களை சிந்தித்து கொண்டிருங்கள். ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது, நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள். உடனே உங்களுக்குள் கட்டாயம் மாற்றம் தெரியும்… செய்து பாருங்கள்.
நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம். மகிழ்ச்சியான அல்லது சந்தோசமான, உணர்வு பூர்வமான ஒரு உடலில் நோய்களால், கிருமிகளால் வாழ முடியாது. எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன, அதுதான் மன இறுக்கம்.
முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள், பிறகு உங்கள் உடலானது தனக்கு இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும். உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று. உங்களுக்குள்ளே ஒரு மருந்தகம் இருக்கிறது. மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கூட மருந்துகள் இன்றி உங்களால் சரி செய்துகொள்ள முடியும். எனவே ஆரோக்கியம் பற்றி மட்டும் பேசுங்கள். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், வியாதியைக் கொண்டாடும் மனநிலையை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry