ஜவ்வரிசி போண்டா! சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்! Step-by-Step Guide to Making Delicious Javvasrisi Bondas!

0
59
Crispy and flavorful Javvarisi (Sabudana) Bonda recipe - A classic Indian snack made with sago pearls, herbs, and spices.

பாயாசம், வத்தல் என ஜவ்வரிசியை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், ஜவ்வரிசி போண்டா செய்திருக்கிறீர்களா? ஜவ்வரிசி எனப்படும் சபுதானா கொண்டு தயாரிக்கப்படும் போண்டா, தனித்துவமான சுவை மற்றும் மிருதுவான தன்மையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும். சுவையான ஜவ்வரிசி போண்டா எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • ஜவ்வரிசி – 1 கப்
  • உருளைக்கிழங்கு – 2
  • கேரட் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • வெங்காயம் – 1
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
  • புதினா தழை – சிறிதளவு
  • இஞ்சி – சிறிதளவு
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • உளுந்து – 1/4 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

ஜவ்வரிசி போண்டா செய்முறை:

  • ஜவ்வரிசியை சுத்தம் செய்து 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் உருளைக்கிழங்கு, கேரட், பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள்.
  • ஊறவைத்த ஜவ்வரிசியை வடிகட்டி, மசித்த காய்கறிகளுடன் சேர்த்து கலக்கவும். பின்னர், அதில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்ற சேர்த்து நன்கு பிசைந்து மென்மையான மாவு பாதத்திற்கு தயார் செய்யவும்.
  • இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து எடுத்தால் சூப்பரான சுவையில் ஜவ்வரிசி போண்டா தயார்.

Also Read : தள்ளுவண்டி கடை தண்ணி சட்னி! டிபன் பிரியர்களின் முதல் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும்!

ஜவ்வரிசி போண்டா ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். ஏனெனில், ஜவ்வரிசியில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. ஜவ்வரிசியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவும். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட்ஸ் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இத்துடன் இரும்பு, பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துக்களும் ஜவ்வரிசியில் நிறைந்துள்ளதால், ஆரோக்கியமான ஸ்நாக்சாக இது இருக்கும்.

இந்த ஜவ்வரிசி போண்டாவில் பல்வேறு காய்கறி கலவைகளை சேர்த்து பல வகைகளில் விருப்பம் போல தயாரித்து சாப்பிட முடியும். இது ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் நோன்பு காலங்களில் பரிமாற ஏற்றது. வீட்டில் வாரத்திற்கு ஒரு முறை வித்தியாசமான உணவு வகைகளை குழந்தைகளுக்கு ஜவ்வரிசி போண்டா போன்ற சத்தான ஸ்நாக்சை செய்து கொடுங்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry