இஞ்சி என்பது மஞ்சள் மற்றும் ஏலக்காய் போன்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகையாகும். இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சளி, மூட்டுவலி, குமட்டல், ஒற்றைத் தலைவலி உள்பட பலவற்றிற்கு இஞ்சி பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
Also Read : வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டுவதற்கான காரணம் தெரியுமா?
வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும்
வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த இஞ்சி நீண்ட காலமாக மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. லேசான வயிற்று வலி அல்லது வயிற்றுப் புண் எதுவாக இருந்தாலும், இஞ்சியை உட்கொள்வது இந்த எல்லா பிரச்சனைகளிலிருந்தும் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். எச்.பைலோரி பாக்டீரியா வயிற்றுப் புண்களை உண்டாக்குகிறது. இஞ்சியை உட்கொண்டால், இந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு வயிற்றுப் புண்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகள், அஜீரணத்தை தீர்ப்பது, வயிற்று புண்களை குணமாக்குவது, மலச்சிக்கலை நீக்குவதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தர இஞ்சி உதவுவதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மூட்டு வலியில் இருந்து நிவாரணம்
இஞ்சியில் ஏராளமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கீல்வாதத்தின் பயங்கரமான வலியை சமாளிக்க இஞ்சியை தவறாமல் உட்கொள்ளலாம். இதனுடன், இஞ்சியில் உள்ள சில கூறுகளும் நமது எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
அல்சைமர் நோயில் நன்மை பயக்கும்
அல்சைமர் போன்ற தீவிர நோய்களில் இருந்து நிவாரணம் பெற இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சி நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மூளை ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் மேம்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அல்சைமர் நோயால் மூளையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. அல்சைமர் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு இது பெரும் நிவாரணம் அளிக்கிறது.
சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்
இஞ்சியை சரியான அளவில் உட்கொள்ளும் போது, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. நாள் ஒன்றுக்கு 4 கிராம் இஞ்சியை சாப்பிட்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
Also Read : மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும்படியான வேலையா? உஷார்..! பாதிப்பு லிஸ்ட் பெருசா போகுது!
மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம்
மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு வலி இருந்தால், இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை உட்கொள்ள வேண்டும். இது தவிர, மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற சுக்கு பொடியையும் உட்கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு அதிக வலி இருந்தால், இந்த இஞ்சி தண்ணீரை ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ளலாம்.
வயிற்று வலியில் இருந்து நிவாரணம்
பச்சை இஞ்சி வயிற்றுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது. வயிற்று வலி, வயிற்று பிடிப்பு போன பிரச்சனைகள் உள்ளவர்கள், பச்சையாக இஞ்சியை சாப்பிட, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
மட்டுமல்லாமல், இஞ்சியை தொடர்ந்து உட்கொள்வதால், சளி ஜுரம் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த இஞ்சி பெரிதும் உதவுகிறது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இயற்கை வலி நிவாரணியாக செயல்படவும் உதவும். மேலும், உடலில் உருவாகும் கழிவுகளை அகற்றும் தன்மை இஞ்சியில் உள்ளது. ரத்தம் கட்டியாகும் நிலையை இஞ்சி தடுப்பதுடன், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
மழைக்காலம் தொடங்கி சென்று கொண்டிருக்கிறது. குளிர்காலம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. நம்மை பல நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. இதிலிருந்து விடுபட உதவும் ஒரு அற்புத பானம் இஞ்சி அல்லது சுக்கு கலந்த தேநீர். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் கிருமிகளை எதிர்த்துப் போராட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தயார் செய்யும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். உடலில் ஆக்ஸிஜனின் சுழற்சியை உறுதி செய்யும். மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
காலையில் இஞ்சி அல்லது சுக்கு கலந்த டீ குடித்தால், நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்திருக்கும். ஏனெனில் இஞ்சியில் துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஏராளமாக உள்ளன. தொடர்ந்து இஞ்சி அல்லது சுக்கு கலந்த டீயை உட்கொண்டால், உங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதனுடன், கீல்வாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry