ஐபோன்களை தயாரிக்க ஆப்பிளுடன் கைகோர்த்த டாடா நிறுவனம்! மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இணையும் டாடாவின் ஐபோன் தயாரிப்புகள்!

0
35
Tata Group will start making Apple iPhones in India for domestic and global markets within two and a half years.

ஐபோன் உற்பத்தியாளர்களின் பிரத்யேக குழுவில் டாடா குழுமம் இணைந்துள்ளது. இரண்டரை ஆண்டுகளில் இந்தியாவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன்களை உருவாக்கத் தொடங்கும்.

தற்போது ஐஃபோன் தயாரிப்பு கிளப்பில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப், பெகாட்ரான் கார்ப் மற்றும் லக்ஸ்ஷேர் பிரசிஷன் இண்டஸ்ட்ரி ஆகியவை நாட்டிற்கு வெளியே உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஐபோன் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

155 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த டாடா நிறுவனம் உப்பு முதல் கப்பல் கட்டுமானம் வரை சகல துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது. டாடா குழுமம் 2020 ஆம் ஆண்டில் அதன் உற்பத்திப் பிரிவான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை நிறுவியது. இதற்காக டாடா குழுமம் $914 மில்லியனை ஒதுக்கியது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே கிருஷ்ணகிரியில் ஐபோனுக்கான உதிரிபாகங்களை தயாரித்து வரும் நிலையில், தற்போது ஐபோன் அசெம்பிளி பணிகளில் இறங்க உள்ளது. இதன் மூலம் ஆப்பிள் உடனான கூட்டணியை டாடா பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது. தைவானை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோனுக்கான சப்ளையர்களில் ஒன்றாக விளங்கி வந்த நிலையில், கர்நாடகத்தின் கோலாரில் இயங்கி வந்த அதன் தொழிற்சாலையை டாடா வாங்க முயன்றது.

Also Read : வகுப்பறையை அரசியல் மேடையாக்கிய திமுக எம்.எல்.ஏ.! நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பிரச்சாரம்!

ஓராண்டுக்கும் மேலாக இழுபறியிலிருந்த ரூ.4000 கோடி மதிப்பிலான உடன்பாடு, தற்போது சுமூக முடிவை எட்டியுள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய மற்றும் உலகச் சந்தைக்கான ஐபோன்களை டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும். இதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் டாடாவின் ஐபோன் தயாரிப்புகளும் அடங்கும்.

ஆப்பிள் நிறுவனத்துக்கான ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கும் பணிகளை டாடா நிறுவனம் மேற்கொள்ள இருப்பதை, மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில், ‘பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம், இந்தியாவை ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான நம்பகமான மற்றும் முக்கிய மையமாக மாற்றியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – சீனா இடையே வளர்ந்து வரும் பிணக்கால், அமெரிக்க பெருநிறுவனங்கள் பலவும் தங்களுக்கான உற்பத்தித் தளங்களை சீனாவிலிருந்து விலக்கி வருகின்றன. அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனமும், சீனாவுக்கு வெளியே வருகிறது. விஸ்ட்ரான் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேற முற்பட்ட வாய்ப்பை டாடா கைப்பற்றியதில், தற்போது இருப்பதைவிட மும்மடங்கு பெரிதாகவும், அதிகமாகவும் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையை டாடா பெருக்க உள்ளது. என்.சந்திரசேககரன் தலைமையிலான டாடா சன்ஸ் புதிய துறையில் இறங்குவது மட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் வேகத்தை பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry