மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ என்ன ஆனான்? முக்கிய தகவலை வெளியிட்டார் தனுஷ்!

0
3

மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் தாணுவுக்கும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷின் 41-வது படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார். லாக்டவுனுக்கு முன் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தனர். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.

இந்நிலையில், கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், இந்த படத்தை தனக்கு வழங்கிய இயக்குனர் மாரி செல்வராஜுக்கும் தயாரிப்பாளர் தாணு சாருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகிபாபு, லால், கவுரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry