சுகர் பேஷன்ட் சாப்பிடவே கூடாத, சாப்பிட வேண்டிய பழங்களின் லிஸ்ட்! Fruits to Eat and Avoid for Diabetics: A Simple Guide!

0
129
The worst fruits for people with diabetes include mango, jackfruit, banana, chikku and grapes. These fruits are high in sugar and low in fibre | Getty Image.

சில உணவுகளை சாப்பிடுவதும், தவிர்ப்பதும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு அவசியம். உடலை ஆரோக்கியமாக பராமரிக்க எப்போதுமே சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு நம்முடைய வழக்கமான டயட்டில் ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், உலர் பழங்கள், பால் போன்ற பல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தொடர்ந்து சேர்த்து கொள்ள வேண்டும்.

அந்ததந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தினசரி சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவாகும். பழங்களில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம். மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ், மினரல்ஸ் ஏராளமாக உள்ளன. பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஃப்ரீ-ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

Also Read : நீரிழிவுநோய் – சுக்கு என்ன தொடர்பு? வெறும் வயிற்றில் சுக்குத்தண்ணீர் குடிப்பதால்..! Benefits of Dry Ginger!

இருப்பினும் நீரழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் பழங்களை சேர்த்து கொள்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் பல பழங்களில் இயற்கையான சர்க்கரை உள்ளது. எனவே பழங்களை சாப்பிட்ட பிறகு, உடலில் ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கிறது. தவிர தொடர்ந்து சில வகை பழங்களை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

எனவே தான் பழங்களின் கிளைசெமிக் இன்டெக்ஸ் சரிபார்க்காமல் சாப்பிட கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பொதுவாக 55-க்கும் குறைவான கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் அபாயத்தை அதிகரிக்கும் வகையில் எந்தெந்த பழங்களில் சர்க்கரை அதிகம் உள்ளது என்பதை அறிந்துகொள்வோம்.

Also Read : சரிவிகித உணவு முறையால் நீரிழிவு குறைபாட்டை தடுக்க முடியுமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சொல்லும் காரணங்கள்..!

அத்திப்பழம்: இது பல முக்கிய சத்துக்கள் நிறைந்த பழம் என்பதில் சந்தேகம் இல்லை. உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு அத்திப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் உடல் வலிமையை அதிகரிக்க உதவும். ஆனால் அத்திப்பழத்தை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் அத்திப்பழம் சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திராட்சை: வைட்டமின் சி-ன் சிறந்த மூலமாக இருக்கும் திராட்சை ஆரோக்கியத்திற்கு நல்லது தான். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி பயனுள்ளதாக இருப்பதால் திராட்சையை சாப்பிடுவது நன்மை பயக்கும். ஆனால் திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. ஒரு கப் திராட்சையில் சுமார் 23 கிராம் சர்க்கரை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் திராட்சை சாப்பிடுவது ஆபத்தானது. இந்த பழத்தை சாப்பிட்டால் உடலில் ரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

மாம்பழம்: பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழம் அனைவருக்கும் பிடித்தமானது. இதன் சுவை, நிறம் மற்றும் உடலுக்கு அளிக்கும் நன்மைகள் என அனைத்தும் சிறப்பானவை. மாம்பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. மறுபுறம் மாம்பழத்தில் இருக்கும் சர்க்கரை அளவு மிக அதிகம். ஒரு மாம்பழத்தில் சுமார் 46 கிராம் சர்க்கரை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிட்டால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் லெவல் வேகமாக அதிகரிக்கும்.

சப்போட்டா : இந்தப் பழத்தின் கிளைசிமிக் இன்டெக்ஸ்(G.I.) 55க்கு மேலே உள்ளதால், இதைத் தவிர்க்க வேண்டும். இப்பழத்தில் சர்க்கரையும், கார்போஹைட்ரேட்டும் அதிகம்.

வாழைப்பழம் : அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் ஜி.ஐ. குறியீடு 46 முதல் 70 வரையாகும். பழுத்த வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தர்பூசணி : குறைந்த நார்ச்சத்து, குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தின் ஜி.ஐ குறியீடு 72. இதில், வைட்டமின் ஏ, சியும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

பழச்சாறுகளில் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் ஃபுருக்டோஸ் அதிகமாக நிறைந்திருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் பழச்சாறு குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் 12 பழங்களை பற்றியும் தெரிந்துகொள்வோம். துடிப்பான மற்றும் சமநிலையான வாழ்க்கை முறைக்கு இது உதவக்கூடும். இந்தப் பழங்களையும் மருத்துவரின் பரிந்துரையை கேட்டு, குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெர்ரி: ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன.

ஆப்பிள்: கரையக்கூடிய நார்ச்சத்து நிரம்பிய ஆப்பிள் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும். கார்போஹைட்ரேட்டின் அளவும் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழத்தை சாப்பிடலாம்.

பேரீச்சம்பழம்: நார்ச்சத்து மற்றும் மெதுவாக ஜீரணிக்கும் சர்க்கரையுடன், சீரான இரத்த சர்க்கரை அளவுகளுக்கு பேரிச்சம்பழம் பங்களிக்கிறது.

பிளம்ஸ்: பிளம்ஸ் ஆக்ஸிஜனேற்ற மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது சிறந்த இரத்த சர்க்கரை மேலாண்மைக்கு பங்களிக்கிறது.

Getty Image

கிவி: நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட கிவி பழம், குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் நீரிழிவு-நட்பு பழமாக உள்ளது.

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை வைட்டமின் சி மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்தை வழங்குகின்றன. சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கின்றன.

பேரிக்காய் : பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

Disclaimer: This article provides general information on fruits for diabetics and is not a substitute for professional medical advice. Always consult your healthcare provider before making dietary changes. The author is not responsible for any outcomes based on this information.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry