
வெங்காயம் இல்லாமல் சமையல் முழுமையடைவது கிடையாது. எனவே வெங்காயம் அத்தியாவசியப் பொருளாக உள்ளது. வெங்காயம் விலை உயர்வு காரணமாகக் கடந்த காலங்களில் ஆட்சியே கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு.வெங்காயம் இல்லாமல் எந்த சாம்பார் மற்றும் கறியும் சுவையாக இருக்காது. அதே போல வெங்காயம் இல்லாமல் சாலட்டும் முழுமையடையாது. அதே நேரம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வெங்காயம் அள்ளி வழங்குகிறது.
சமையலுக்கு முக்கிய சுவையே வெங்காயம்தான். அதை வதங்கும் பக்குவத்திற்கு ஏற்ப சுவை மாறும். அதாவது கண்ணாடி பதத்தில் வதக்கினால் ஒரு சுவை கொடுக்கும். பொன்னிறமாக வதக்கினால் ஒரு சுவை கொடுக்கும். குறிப்பாக பிரியாணிக்கு வெங்காயத்தை அதிகமாக சேர்த்து பொன்னிறமாக வதக்கினால்தான் அதன் சுவையே தூக்கலாக இருக்கும். இப்படி இந்திய சமையலில் தவிர்க்க முடியாதது.
வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. பொட்டாசியம், கார்போஹைட்ரேட், சோடியம், வைட்டமின் சி, பி6, வைட்டமின் டி, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் வெங்காயத்தில் உள்ளன. குடல் இயக்கத்திற்கும் நல்லது. இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது. கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்தும் பாதுகாக்கிறது. கேன்சர் அபாயத்தையும் வெங்காயம் குறைக்கும் என கூறப்படுகிறது.
வெங்காயத்தை நறுக்கி உரிக்கும் போது அதன் உட்புறத்தின் சில பகுதிகளில் கரும்புள்ளிகள் அல்லது கருப்பு பவுடர் படலம் இருப்பதை அடிக்கடி பார்த்திருக்ககூடும். சிலர் அதை வெட்டி அகற்றி விடுவார்கள், சிலரோ அதை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு சமையலுக்கு தொடர்ந்து பயன்படுத்துவார்கள். ஆனால் பலருக்கும் வெங்காயத்தில் காணப்படும். இந்த கரும்புள்ளிகள் என்னவென்று தெரியாது. அதே போல அதை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பலருக்கும் தெரியாது.
உண்மையில் கரும்புள்ளிகள் காணப்படும் வெங்காயத்தை கண்டால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உடல் நலத்திற்கு நல்லதல்ல. இது போன்ற வெங்காயத்தை சாப்பிடுவது மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது ஒரு வகையான பூஞ்சை தொற்று ஆகும்.
வெங்காயத்தை சுற்றி அப்படி கருப்பாக இருப்பது ஒருவித பூஞ்சை ஆகும். வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு பூஞ்சை ஆஸ்பெர்கிலஸ் நைகர் (Aspergillus niger) என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பூஞ்சை மண்ணில் காணப்படுகிறது. இந்த கருப்பு பூஞ்சை மியூகோர்மைகோசிஸ் அல்ல, ஆனால் இது ஒரு வகை நச்சுத்தன்மையை வெளியிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
எனவே இந்த கருப்பு பூஞ்சை உள்ள பகுதியை முழுவதுமாக அகற்றிவிட்டு வெங்காயத்தை பயன்படுத்தினால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இது அலர்ஜி ஏற்படும் நபர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த வகை வெங்காயத்தை சாப்பிடுவது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக கருப்பு பூஞ்சையோடு இருக்கும் வெங்காயம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் இந்த பூஞ்சை காற்றில் பரவும் போது, ஏற்கனவே பிரச்சனை உள்ளவர்கள் அதை சுவாசிக்க வாய்ப்புள்ளது.
Also Read : மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 12 உணவுகள் எவை தெரியுமா? 12 Foods You Should Never Reheat!
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓரிரு வெங்காயம் இதுபோன்று கருப்புள்ளிகள் கொஞ்சம் அழுகலுடன் இருந்தால், அந்த வெங்காயத்தை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அதேநேரம் வெங்காயத்தை வாங்குவதற்கு முன்பே கருப்பு பூஞ்சை இல்லாமல் இருக்கிறதா என்ற பார்த்து வாங்குவது இன்னும் பாதுகாப்பானது. வெங்காயத்தில் அடிக்கடி காணப்படும் கருப்பு பூஞ்சை விஷமானது என்று சில ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் கருப்பு பூஞ்சை காணப்படும் வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதில் உள்ள கருப்பு பூஞ்சை மற்ற உணவு பொருட்களுக்கும் பரவி நஞ்சாக மாற வாய்ப்புள்ளது உஷாராக இருக்க வேண்டும். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதை எடுத்துக்கொள்வதால் தலைவலி, வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற அலர்ஜி ஏற்படலாம்.
வெங்காயத்தின் மேற்புறம் மட்டும் இந்த கருப்பு பூஞ்சை இருந்தால் அந்த பகுதியை மட்டும் நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். ஆனால் வெங்காயத்தின் உட்புறமும் கருப்பாக இருந்தால் தேவையற்ற அலர்ஜி ஏற்படுவதை தவிர்க்க அதை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்டுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry