இயக்குனர் பாலா தயாரிப்பில், பத்மகுமார் இயக்க, ஆர் கே சுரேஷ் கதாநாயகனாகவும், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், GV பிரகாஷ் இசையமைத்த “விசித்திரன்” திரைப்படத்தை இயக்குநர்கள் பலர் பாராட்டியுள்ளனர். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜோசப் படத்தின் ரீமேக்தான் விசித்திரன்.
விசித்திரன் திரைப்படத்தை, சென்னையில் இயக்குனர்கள் சங்கத்திற்கு படக்குழு திரையிட்டது.
விறுவிறுப்பான திரைக்கதை, தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக நடிகர் ஆர்.கே. சுரேஷ் “மாயன்” என்ற கதாபாத்திரத்தை ஏற்று மிக சிறப்பாக நடித்ததை இயக்குனர் சங்கம் வெகுவாக பாராட்டியது. ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குனர் சங்கத்திற்கு திரையிடப்பட்ட முதல் படம் விசித்திரன் ஆகும்.
தன்னை முழுமையாக ஒப்படைத்து அனைவரும் வியக்கும்படி சிறப்பாக நடித்து ஆர்.கே.சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார் என்று இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறினார். மேலும், “இந்த படத்துக்கு மரணம் இல்லை, காலத்துக்கும் பெயர் சொல்லும் ஒரு படைப்பு, இந்த படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே அனைவரும் இந்த படத்தை பார்க்கவேண்டும்”. என்று கூறினார்.
இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக தான் தூங்கவில்லை என்று இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்தார். இயக்குனர் சீனு ராமசாமி பேசும்போது, “விசித்திரன் படத்தின் மூலமாக ஒரு நேர்த்தியான நடிகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன். தொடர்ந்து இதுபோல நடிப்புக்கு சவால் விடும் படங்களில் ஆர்.கே. சுரேஷ் நடிக்க வேண்டும். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார்.
அதன்பிறகு, ஒவ்வொரு துணை, இணை, உதவி இயக்குனர்கள் தங்கள் கருத்துகளை முறையே பதிவு செய்தனர். அதை படக்குழு விளம்பரத்துக்காக எந்தவித தொகுப்பும் செய்யாமல், அதை அப்படியே இணையதளத்தில் பதிவு செய்துள்ளது. ஒரூ வளர்ந்தவரும் நடிகனின் படத்தை பார்த்து இயக்குனர் சங்கம் வெகுவாக சிலாகித்து பாராட்டியது இதுவே முதல் முறை. நிகழ்ச்சியின் இறுதியில் படத்தின் கதாநாயகனும், தனது Studio 9 நிறுவனம் மூலம் உலகெங்கும் “விசித்திரன்” படத்தை வெளியிடவும் உள்ள ஆர்.கே.சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry