உணவின் சுவையை அதிகரிக்கப் பயன்படும் நறுமணப் பொருளாக மட்டும் கிராம்பு இருப்பது கிடையாது. ஊட்டச்சத்து நிறைந்த மசாலாக்களில் ஒன்றாக கிராம்பு இருக்கிறது. சமையலின் சுவையை மட்டும் மேம்படுத்தாமல் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. நறுமண பொருளாக மட்டுமே இந்த கிராம்பை நாம் சுருக்கிவிடுகிறோம். கிராம்பில் உள்ள நன்மைகளை ஒரு பெரிய லிஸ்ட்டே போடலாம். பேஸ்ட் வகையறாக்கள், சோப்புகள் மற்றும் அழகு சாதன பொருள்களிலும் இவை பயன்படுத்தப்படுகிறது.
கிராம்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் என பல சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன. கிராம்புகளை தினமும் காலையில் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், உடல்நல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
Also Read : நீங்க சிகரெட் பிடிப்பவரா? புற்றுநோயில் இருந்து தப்பிக்க இந்த 7 டெஸ்ட்டும் உடனே செஞ்சுக்கோங்க..!
Syzygium Aromaticum மரத்தில் இருந்து கிடைக்கும் உலர்ந்த மலர் மொட்டுகளே கிராம்பு அல்லது இலவங்கம் ஆகும். தமிழ்நாட்டில் நீலகிரி, கன்னியாகுமரி, ஏற்காடு, திருநெல்வேலி மற்றும் கீழ்பழனி மலைப்பகுதிகளில் கிராம்பு பயிரிடப்படுகிறது. மரம் ஒன்றிற்கு 2 முதல் 3 கிலோ உலர்ந்த கிராம்பு கிடைக்கும். 2023 நிதியாண்டில், கிராம்பு உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது, தோராயமாக 1,012 மெட்ரிக் டன்களை உற்பத்தி செய்தது.
கிராம்பு அவற்றின் சக்திவாய்ந்த ஆரோக்கிய நலன்களுக்காக பல நூற்றாண்டுகளாகவே அறியப்படுகிறது. சீனா மற்றும் பாரசீகம் ஆகிய நாடுகளில் ஆண்மையை அதிகரிக்கும் மூலிகை மருந்தாக கிராம்பு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கிராம்பு என்ற கணக்கில் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வை கணிசமாக அதிகரிக்கிறது.
Also Read : இந்தியாவின் தேசிய ஸ்வீட் எது தெரியுமா? பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்!
செரிமான ஆரோக்கிய மேம்பாடு
கிராம்பு செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. எனவே தினமும் ஒரு கிராம்பை உட்கொள்வது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, உணவு முறிவு மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது அஜீரணம், வீக்கம் அல்லது மலச்சிக்கல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. கூடுதலாக, கிராம்பு உட்கொள்வது குமட்டல் மற்றும் வயிற்று அசௌகரியத்தை போக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது.
வாய் ஆரோக்கியம்
நீண்ட காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய மூலிகைகளில் ஒன்றாக கிராம்பு அமைகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் ஈறு நோய்கள் மற்றும் பற்சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவது சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்வதுடன், வாய் புண்களைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் பல்வலியைப் போக்கவும் கிராம்பு ஒரு சிறந்த தேர்வாகும். பொதுவாக கிராம்புகளில் இயற்கையான மயக்க மருந்து காணப்படும். இது பாதிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக உணர்வை குறைத்து, பல் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.
அழற்சி எதிர்ப்புப் பண்புகள்
நாள்பட்ட அழற்சியின் காரணமாக இதய நோய், கீல்வாதம் மற்றும் இன்னும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படலாம். இவை அனைத்திறுகும் சிறந்த தீர்வாக கிராம்பு நீர் அமைகிறது. யூஜெனால் இருப்பதால் கிராம்பு ஆனது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் வீக்கத்தைக் குறைக்க ஏதுவாக அமைகிறது. இதன் மூலம் நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். இது தவிர, தினசரி உணவில் ஒரு கிராம்பு சேர்த்துக்கொள்வதன் மூலம், விறைப்புத்தன்மை, மூட்டு வலி போன்றவற்றைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தி
ஒவ்வொரு நாளும் ஒரு கிராம்பு சாப்பிடுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைவது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் திறனை அதிகரிப்பதாகும். இதில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. குறிப்பாக, கிராம்பில் உள்ள யூஜெனால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதாகவும் அமைகிறது. இவ்வாறு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம், சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களைத் தடுக்கலாம். இது அன்றாட வழக்கத்திற்கு இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.
நீரிழிவு நோய் நிர்வகிப்பு
நீரிழிவு நோயாளிகள் தங்களது அன்றாட உணவில் கிராம்பு சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கலாம். இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலமும், சிறந்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலமும், கிராம்பு இரத்த சர்க்கரையை சீராக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அல்லது நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே தினமும் ஒரு கிராம்பை உட்கொள்வதன் மூலம் சீரான மற்றும் நிலையான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கலாம். தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பு மென்று சாப்பிடுவதன் மூலம் இது போன்ற ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
புற்றுநோய் தடுப்பு
ஆண்டிஆக்சிடெனட் நிறைய உள்ளதால், எந்தவிதமான புற்று நோய்களும் எளிதில் தாக்காது. கிராம்பில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட வேதிக்கூறுகள் உள்ளன. கிராம்பின் முக்கிய ஊட்டச்சத்து மதிப்பு யூஜெனால் ஆகும். இது 70 முதல் 90% வரை உள்ளது. எஞ்சியிருப்பவை அசிடைல், யூஜெனோல், வெண்ணிலின், டானின்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் போன்றவை அடங்கியுள்ளன இந்த கிராம்பு எண்ணெய் பற்பசை தயாரிப்பிலும், பல் சிகிச்சைக்கும், மயக்க மருந்திலும் , சளி இருமல், காய்ச்சல் போன்றவற்றை வெளியேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.
கிராம்பின் மருத்துவ குணங்களுக்கு அதில் உள்ள யூஜெனால் காரணமாய் உள்ளதாக நவீன அறிவியல் கூறுகின்றது. கிராம்பில் புற்று நோயை தடுக்கும் இயற்கை நிறமிகளான குர்சிட்டின், கேம்ப்பெரால் ஆகிய முக்கிய நிறமி வேதிப் பொருட்களும் உள்ளது கூடுதல் சிறப்பு. நுரையீரலின் நண்பன் இந்த கிராம்பு என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சுவாச பிரச்சனையை தீர்க்கிறது. ஆஸ்துமா பிரச்சனைக்கே, சிகிச்சையளிக்க இந்த கிராம்பு உதவுகிறதாம்.
தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்லது. அது மன அழுத்தத்தை குறைத்து நன்றாக தூங்க உதவி செய்கிறது. கிராம்பு சாப்பிடுவதால் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. எடையை குறைக்கவும் உதவுகிறது. கிராம்பு சாப்பிடுவதால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்னைகள் குறையும்.
பலர் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். அத்தகையவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நன்றாக கட்டுக்குள் வரும். இரவில் படுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள சில சிறப்பு சத்துக்கள் முகப்பருக்கள் வராமல் தடுக்கும். கிராம்பு தொண்டை வலியை போக்கவும் உதவுகிறது. கிராம்பை வெறுமனே சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம். அல்லது காலை நேரத்தில் டீ போட்டு குடிக்கலாம்.
நந்தி ஃபுட்ஸ் நிறுவனத்தார் சுக்குமல்லி பொடியை ஹோம் மேடாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள். ரசாயனமோ, நிறமிகளோ சேர்க்கப்படாமல் தயார் செய்யப்படும் இந்த சுக்குமல்லி காபி / டீ-யானது, ரசாயன கலப்பில்லாத சுத்தமான தனியா, சுக்கு, மிளகு, ஏலக்காய், பெருஞ்சீரம், கிராம்பு, சித்தரத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது. 50 கிராம் ரூ.59. (கூரியர் அல்லது தபால் செலவு தனி) மழை, குளிர்காலத்துக்கு ஏற்ற, நந்தி ஃபுட்ஸ் சுக்குமல்லி டீ / காபி பொடி தேவைப்படுவோர் 94440 86655 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தவும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry