மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி! காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் வீரர்களுக்கு அழைப்பு!

0
58

காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பாக, மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் வரும் அக்டோபர் 1ம் தேதி தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

14,16,18,20 ஆகிய வயது பிரிவுகளின் கீழ் நடக்கும் இந்தப் போட்டியில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்வதற்கான நுழைவுப்படிவத்தை பூர்த்தி செய்து சென்னை தாம்பரம் டிடிகே நகரில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் அலுவலகத்தில் நாளை (28ம் தேதி) ஒப்படைத்துவிட்டு, பிஐபி எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு போட்டிக்கு ரூ.50 எனும் விகிதத்தில் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். வெற்றி பெறும் வீரர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதுதொடர்பாக மேலும் விவரங்களைப் பெற டி.கிருஷ்ணராஜை (9840591055) தொடர்பு கொள்ளலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry