நியூஸ் பேப்பரில் வைத்து வடை, பஜ்ஜி சாப்பிடுவதில் உள்ள ஆபத்து தெரியுமா? Dangers of eating food in newspaper!

0
219
Discover the hidden dangers of eating vadai and bajji wrapped in newspaper. Learn about the health risks associated with consuming food from unsanitary packaging and how it can affect your well-being.

வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற ‘நியூஸ் பேப்பர்‘ எனப்படும் செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

அதிக எண்ணெயுடன் பலகாரத்தை சாப்பிடுவதால் கொலஸ்டிரால் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிந்த மக்கள், அந்த எண்ணெயை எடுக்க பயன்படுத்தப்படும் செய்தித் தாள்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் அக்கறை காட்டுவதில்லை.

நியூஸ்பேப்பரில் வைத்து எண்ணெய் பிழிவது கொஞ்சம், கொஞ்சமாக விஷத்தை உண்பதற்கு சமம். உலோக அசுத்தங்களும் தீங்கு விளைவிக்கக்கூடிய “தாலேட்” என்ற வேதிப்பொருள் கனிம எண்ணெய்களும் அச்சிட்ட காகிதத்தில் பொட்டலமிடப்படும் உணவில் காணப்படுவதால் அஜீரண கோளாறு ஏற்படுகிறது. இதைத்தவிர நோய் எதிர்ப்பு சக்தி இழந்து புற்றுநோய் உள்ளிட்ட நோய் தாக்கும் ஆபத்தும் உள்ளது.

Also Read : 2025க்கான மேஷ ராசி பலன் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…! துரத்தும் சனி பகவான்! உஷார்..!

செய்தித்தாள்களின் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் செய்தித்தாளில் கை துடைப்பது. சிறிய ஓட்டல்கள், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின், ஈரமான கைகளை துடைப்பதற்கு பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள். அவற்றில் நம் கையை துடைக்கும் போது, நமது உடலுக்குள் காரீயம் சென்றுவிடுகிறது.

செய்தித்தாள்களில் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் மைகளில் காரீயம் என்ற தனிமம் உள்ளது. செய்தித்தாள்கள் உலர்வாக இருக்கும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. தண்ணீர் பட்டால், பிரச்சினைதான். இது கூட பரவாயில்லை. பலரும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள்.

இது அதைவிட மிகப் பெரிய ஆபத்து. காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்று விடும். காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இந்த காரியம் கழிவாக வெளியேறாமல் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து தீஙகை ஏற்பத்துகின்றன. அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருள்களைத் தொடர்ந்து உண்போருக்கு, அந்தப் பேப்பரின் அச்சு மையில் உள்ள காரீயத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கக்கூடும்.

இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் சென்றால், காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியேறாது. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப் போக சேர்ந்து கொண்டே போகும். கெடுதல்கள் கூடிக்கொண்டே போகும். நிறைய பேர் காரீயம் என்றால் அது ஈயம், அலுமினியம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. காரீயம் என்பது வேறு. ஈயமும், அலுமினியமும் நமக்கு கெடுதல் தராத உலோகங்கள்.

எவர்சில்வர் பாத்திரங்கள் வருவதற்கு முன்பு நமது சமையல் அறைகளை ஆட்சி செய்தவை, ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரங்களும், அலுமினியப் பாத்திரங்களும்தான். அதனால் அவை கெடுதல் இல்லை. காரீயம் தான் கெடுதல். முன்பெல்லாம் பெட்ரோலில் கூட காரீயம் இருந்தது. அது வாகனப்புகை மூலம் காற்றின் வழியாக மனித நுரையீரலுக்குள் தஞ்சம் அடைந்தது. இப்போது பெட்ரோலில் காரீயம் நீக்கப்பட்டு விட்டது. சில உலோகங்கள் ஓரளவுக்கு உடலில் இருக்கலாம் அது கெடுதல் தராது என்பார்கள். ஆனால் காரீயம் சிறிதளவு உடலுக்குள் சென்றால் கூட கெடுதல்தான்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry