சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை புரிந்து வருகிறது.
‘ஹீரோ’ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள்.
கடந்த 27 ஆம் தேதி கேரளாவிலும் டாக்டர் வெளியிடப்பட்டது. அங்கும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வெளியான இரண்டே நாளில் 66 லட்சம் வசூலைக் குவித்தது. இந்த நிலையில், ‘டாக்டர்’ திரைப்படம் உலகம் முழுக்க வசூலில் 100 கோடியை தாண்டிவிட்டதாக படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக கே.ஜே.ஆர் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; “இந்த வேற மாறி பிளாக்பஸ்டர் படத்தின் 25 நாட்களும் உங்களைச் சிரிக்க, கைதட்ட, உற்சாகப்படுத்த வைத்துள்ளது. ‘டாக்டர்‘ திரைப்படம் திரையரங்குகளின் மொத்த வசூல் 100 கோடி ரூபாயைக் கடந்திருப்பதை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இது உங்களுக்கும் எங்களுக்குமான வெற்றி“.
Entering the 25th Day with a bang! Your favourite entertainer #DOCTOR joins the 100 crore club😍
Thank you for the overwhelming support and love. You made this happen ♥️ #DOCTORHits100Crs #MegaBlockBusterDOCTOR @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl pic.twitter.com/pj2wkTkm7G
— KJR Studios (@kjr_studios) November 2, 2021
25 days of this vera maari BLOCKBUSTER making you laugh, clap & cheer!
We’re happy to declare that #Doctor has officially grossed 100 Crores in Theatrical 🎊🎉🥳#DOCTORHits100CrsThis victory is yours as much as ours ❤️ pic.twitter.com/kMdCJk97fk
— KJR Studios (@kjr_studios) November 2, 2021
தமிழகத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில், ‘ரெமோ‘தான் அதிக வசூல் செய்துள்ளது. அந்தப் படத்தின் வசூலை ‘டாக்டர்‘ கடந்துவிட்டது. இதனிடையே தீபாவளி (நவம்பர் 4) அன்று சன் டிவியில் ‘டாக்டர்‘ ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கு அடுத்த நாள் (நவம்பர் 5) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது. தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கேரள மாநிலங்களிலும் ‘டாக்டர்‘ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry