முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கம் கடிதம்! மதுரை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

0
233

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும், மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும், ‘இப்போகிரடிக் உறுதிமொழி’ யே பின்பற்றப்பட்டு வருகிறது.

அரசு மதுரை மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக ‘மகரிஷி சரக் சபத்’ எனும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேலு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலலில் வைக்கப்பட்டுள்ளார்.

Also Read : சமஸ்கிருதத்தில் உறுதிமொழி! என்னவென்று தெரியாமல் நடவடிக்கை எடுப்பதா? அரசு மீது டீன் குற்றச்சாட்டு!

இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேலுவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், “தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி ‘வைட் கோட் செர்மனி, சரக் சபத் உறுதிமொழி எடுக்கப்பட்டது.  தேசிய மருத்துவ ஆணைய சுற்றறிக்கை குறித்து அறிவுறுத்தல் எதுவும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை. சரக் சபத் போன்றவை குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மருத்துவர்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில்  சரக் சபத்  உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry