பல் துலக்கும்போது வாயில் சிக்கிய டூத் பிரஷ்! அறுத்து எடுத்த மருத்துவர்கள்! வைரலாகும் ஆப்பரேஷன் வீடியோ!

0
260

பல் துலக்கும்போது பெண்மணியின் வாயில் வசமாக சிக்கிய டூத் பிரஷை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து அகற்றினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அந்தப் பெண் நலமாக இருக்கிறார்.

Also Read: நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!

காஞ்சிபுரம் எண்ணெய்க்கார தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (34). கடந்த வியாழக் கிழமை காலையில் ரேவதி தனது வீட்டு பாத்ரூமில் டூத் பிரஷ் மூலம் பல் துலக்கி கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தார். இதில், ரேவதியின் வாயில், பற்களின் இடுக்குகளின் நடுவே டூத் பிரஷ் வசமாக சிக்கிக்கொண்டது.

வாயைத் திறக்க முடியாமலும், மூட முடியாமலும் அலறிய ரேவதியை, உறவினர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ரேவதியை பரிசோதித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் நரேன், வெங்கடேசன் ஆகியோர், ரேவதியின் கன்னத்தில் துளையிட்டு டூத் பிரஷை அகற்ற முடிவெடுத்தனர். அதன்படி லோக்கல் அனஸ்தீஷியா எனப்படும் மருந்து செலுத்தி, காதின் கீழே துளையிட்டு, கன்னத்தின் வழியாக ரேவதியின் பல் இடுக்குகளில் வசமாக சிக்கிக்கொண்டிருந்த டூத் பிரஷின் முன் பாதியை மருத்துவர்கள் வெட்டி எடுத்தனர்.

பின்னர் பல் இடுக்குகளின் மத்தியில் மிக ஆழமாக சிக்கிக்கொண்டு இருந்த டூத் பிரஷின் பின் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். உரிய நேரத்தில் சரியான பரிசோதனை அடிப்படையில் அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்கள் நரேன், வெங்கடேசன், செவிலியர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுகள் குவிகிறது.

Dr. நரேன், Dr. வெங்கடேசன்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரேவதி உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முகத்தின் வழியாக டூத் பிரஷை மருத்துவர்கள் அகற்றிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry