சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாகவும் ஈபிஎஸ் விமர்சனம்!

0
39
AIADMK district secretaries' meeting

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்க உள்ள அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டப்பட்டது. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆகஸ்ட்டில் நடக்கும் அதிமுக மாநில மாநாடு, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடிதளமாக அமையும்.

EPS launched a new logo for the grand conference, will be in Madurai that will be held on August 20.
Logo for the Madurai conference

Also Read : கனிமக்கொள்ளையை தடுக்காமல் தமிழக அரசு நாடகம்! கபளீகரம் செய்யப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை!

அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்து விட்டது என பலரும் விமர்சனம் செய்தனர். அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை. தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். ஒன்றரை மாதத்தில் அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் சிலர் கண்ட கனவு தற்போது உடைந்து விட்டது.

அனைத்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் மூலமாக தகர்த்து எறியப்பட்டுள்ளது. இனி அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்பதை நிருபித்து இருக்கிறோம். மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை இருமாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேகதாது விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் வேண்டுமென்றே அரசியல் செய்கிறது

இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை உருவாக்கும் வகையில் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார். கர்நாடகா காங்கிரஸ் அரசுடன் பேசி ஜூன் மாத நீர் பங்கீட்டை முதலமைச்சர் ஸ்டாலின் பெறாதது ஏன்? உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்ட அதிமுக எம்பிக்கள் 24 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர்.

Also Read : சுயநலத்துக்காக கூட்டணியை உடைக்கும் கரூர் கோமாளி! அண்ணாமலைக்கு அதிமுக தொண்டனின் பதிலடி!

அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சிறப்பான முறையில் செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டது அதிமுக தான். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது. தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுவிட்டது. குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் காய்ச்சல் சிகிச்சைக்கு வந்தவருக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையை கூட சரியாக பராமரிக்கவில்லை. திமுக ஆட்சியில் நிர்வாக திறமையே இல்லை. இனியாவது தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழிக்க வேண்டும்.”

தக்காளி விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தக்காளி மட்டுமல்ல சின்ன வெங்காயம், பருப்பு, மளிகை சாமான்கள் எல்லாமே விலை உயர்ந்துள்ளன. குட்டி அமைச்சர் ஒருவர் வந்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் படம் எடுக்கிறார், அவரே படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். விலைவாசி உயர்வை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. அவரிடம் போய் விலைவாசி உயர்வை பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேளுங்கள்.

Also Read : தந்தையின் இறப்பும், ஆற்று மணல் கொள்ளையும்! வெளிநாடு வாழ் இந்தியரின் வேதனைக் குரல்!

இவர்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர். இது பொய்யான தகவல். நான் முதலமைச்சராக பதவியேற்ற போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது சட்டசபையில் சபாநாயகர் தனபால் சட்டசபை கூட்டத்தை கூட்டினார். அப்போது அவரது மைக்கை உடைத்து, பெஞ்சை உடைத்து பெரிய ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபால் அவர்களின் சட்டையை கிழித்தனர். புனிதமான இருக்கையில் அமர்ந்தனர் திமுகவினர். இவர்களா சமூக நீதியை காப்பாற்றியவர்கள். இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாக்கிறார்கள்?

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை கீழே இறக்கி எங்களோடு அமர வைத்தீர்களே, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைத்துள்ளதாக பேசுவதற்கு திமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது. சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திமுகதான் என்று அவர் கூறினார்.

கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம். பாஜக உடனான உறவு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். காலம் கனிந்து வரும் போது கூட்டணி பற்றி தெரிவிப்போம்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதனிடையே, இந்தியாவில் சிறுபான்மையினரின் மத உரிமைகளை மோசமாக பாதிக்கும் வகையில் யுனிஃபார்ம் சிவில் கோடிற்காக அரசியல் சட்டத்தில் எந்தத் திருத்தமும் கொண்டு வரக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry