சூடான தேநீர் மற்றும் சிகரெட் காம்பினேஷன் மனித உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன, அவற்றை ஒன்றாக உட்கொள்வது ஆபத்துகளை அதிகப்படுத்தும், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
2023 இல் ‘ஆனல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்’ இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, சூடான தேநீர் உணவுக்குழாய் செல்களை சேதப்படுத்தும் என்றும், தேநீருடன் புகைபிடிப்பது ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. காலப்போக்கில், இந்த பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
Also Read : அரிசியை ஊறவைத்து சமைப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
ஒரு சிகரெட்டில் 6 முதல் 12 மில்லிகிராம் நிகோடின் உள்ளது. சிகரெட் புகைப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம், இந்த பழக்கம் இல்லாதவர்களை விட 2 முதல் 3 மடங்கு அதிகம். சிகரெட்டில் உள்ள நிகோடின் இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளை சுருங்கச் செய்து, இதயத்திற்கு சுத்தமான ரத்தம் கிடைக்காமல் தடுக்கிறது. இது மாரடைப்பு அபாயத்தை பெருமளவில் அதிகரிக்கிறது.
பலர் அலுவலகத்தில் வேலை செய்து களைப்பாக இருக்கும்போது இடையிடையே டீ ப்ரேக் எடுத்துக்கொள்வார்கள். அப்போது பெரும்பாலானோர் டீ குடித்துவிட்டு சிகரெட் புகைப்பார்கள். இளைஞர்களிடையே தேநீர் மற்றும் சிகரெட் பழக்கம் அதிகரித்து வருகிறது. நீங்கள் டீ குடிப்பதோடு சிகரெட் புகைப்பதால் அது எதிர்காலத்தில் உங்களுக்கு பல பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். தேநீர் மற்றும் சிகரெட் கலவை, இதய நோய் மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும்.
தேநீரில் காணப்படும் பாலிபினால்கள் எனப்படும் இயற்கை கலவைகள் பொதுவாக இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால் தேநீரில் பால் சேர்ப்பது அதன் நல்ல குணங்களை மோசமாக்கிவிடும் என்கின்றனர். உண்மையில், பாலில் காணப்படும் புரதம் தேநீரில் உள்ள பாலிபினால் கூறுகளின் விளைவைக் குறைக்கிறது. இதன் காரணமாக, அதிகமாக டீ குடிப்பது இதயத் துடிப்பை மாற்றி இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே பால் கலந்த டீ குடிக்காமல் இருப்பது நல்லது.
Also Read : இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! அன்றாட ஆரோக்கியத்துக்கான சூப்பர் ஃபுட்!
டீயுடன் சிகரெட் புகைப்பதால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகரிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டீயில் இருக்கும் நச்சுகள் சிகரெட் புகையுடன் கலந்தால், அவை புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்கும். எனவே டீயுடன் சிகரெட் புகைக்க வேண்டாம். டீயுடன் சேர்த்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் என்னென்ன உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.
* இதய நோய் அதிகரிக்கும் ஆபத்து
* உணவுக்குழாய் புற்றுநோய்
* தொண்டை புற்றுநோய்
* நுரையீரல் புற்றுநோய்
* ஆண்மைக்குறைவு மற்றும் கருவுறாமை ஆபத்து
* வயிற்றுப் புண்கள்
* கை கால்களில் புண்கள்
* நினைவாற்றல் இழப்பு
* மூளை மற்றும் இதய பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது
* ஆயுட்காலம் குறையும்
டீ, சிகரெட் காம்பினேஷன் உங்க செரிமான அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இது உணவுக்குழாய், வயிற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, அசிடிட்டி, வாயுத் தொல்லை மாதிரியான செரிமானப் பிரச்சினைகள் வரும்.
சிகரெட் பிடிப்பவர்களுக்கு சிகரெட் பிடிக்கும் போது ரிலாக்ஸாக இருப்பதுபோல தோன்றும். ஆனால் அதன்பின்னர் மன அழுத்தமும் டென்ஷனும் அதிகமாகும். டீயில் இருக்கும் கேஃபைன் காஃபைன் தூக்கமின்யை ஏற்படுத்தும். இதனால் மன ஆரோக்கியம் மேலும் மோசமாகும்.
டீ மற்றும் சிகரெட் புகையில் இருக்கும் டானின்கள் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். குறிப்பாக உங்க வெள்ளைப் பற்களைப் பழுப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றிவிடும். பற்களுடைய பலத்தைக் குறைக்கும். சிகரெட் பிடிப்பதால் வாயில் துர்நாற்றம் வரும். இது வாய்ப் புற்றுநோய்க்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.
டீயுடன் மற்றும் சிகரெட் பிடிப்பதில் இருந்து எளிதில் விடுபட என்ன செய்ய வேண்டும்? டீயை மீண்டும் மீண்டும் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும், இது சிறுநீரகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. தேநீர் அருந்தும்போது உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொலைபேசியில் பேசுங்கள். தேவைப்பட்டால் மனநல மருத்துவர்களின் உதவியையும் நாடுங்கள். பெரும்பாலும் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போதுதான் அதிக டீ அல்லது சிகரெட் குடிக்கத் தொடங்குவார்கள். அத்தகைய சூழ்நிலையில், தேநீருடன் சிகரெட் பிடிப்பதற்கு முன் உங்கள் மன அழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து அதை சமாளிக்க முயற்சி செய்யுங்கள்.
பொதுவாக, நமக்கு கடைகளில் கிடைப்பது டீ டஸ்ட்தான். டீ இலைகள் கிடைப்பதில்லை. தரமான டீ இலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. எனவே, மூலிகை தேநீர்களை தேர்வு செய்வது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். மேலும், சிகரெட், தேநீர் போன்ற பழக்கங்களில் இருந்து வெளிவந்து, மூலிகைத் தேநீரை அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளும்போது, சிகரெட் – தேநீரால் ஏற்பட்ட பக்க விளைவுகளும் குறையும் வாய்ப்புள்ளது. நந்தி ஃபுட்ஸ் மூலிகை தேநீர்களை வாங்க 94440 86655 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry