சுட்டெரிக்கும் வெயில்! வீட்டில் ஏசி இருக்கிறதா? பராமரிப்புக்கான முழுமையான வழிகாட்டுதல்!

0
331

.சி இல்லாமல் இருக்க முடியுமா? அதுவும் கொளுத்தும் வெயிலில், என்று ஏ.சி வாங்குபவர்கள், அதை பராமரிக்கத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஏசி பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?

.சி வாங்கும் போது, பொருத்தும் இடத்தின் சதுரடியை கணக்கில் கொள்ள வேண்டும். அறை பரப்பளவு 100 சதுரடியாக இருந்தால் 1 டன் அளவுள்ள ஏ.சி போதுமானது. அதற்கு மேல் இருந்தால் ஒன்றரை டன். 200 சதுரடி இருந்தால் 2 டன் கொண்ட ஏ.சி பொருத்தலாம்.

.சி வாங்கும் போது இலவச ஸ்டெபிலைசர் கொடுப்பார்கள். அது, தரம் குறைந்த ஸ்டெபிலைசராக இருந்தால் அதை தவிர்த்துவிட வேண்டும். .எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற முறையான ஸ்டெபிலைசர் பயன்படுத்த வேண்டும்.  .சியில் உயர் மின்னழுத்தத்தை தாங்க கூடிய அளவுக்கு கேபிள், சுவிட்ச் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். .சியை நீங்கள் படுக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஆறடி உயரத்துக்கு பொருத்துங்கள். அப்படி செய்தால் தான் ஏ.சியிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அந்த அறை முழுக்க கிடைக்கும்.

.சி உள்ள அறையில் சூரிய ஒளி நேரடியாக பட்டாலோ, அத்தியாவசிய பொருட்களை வைப்பதாலோ அறை குளிர்ச்சி அடைய நேரம் அதிகமாகும், அதனால் மின்சாரம் அதிகம் செலவாகும். .சி இயங்கிகொண்டிருக்கும், .சியின் உள்ளிருக்கும் காயிலில் படும் வகையில் அருகில் சென்று ரூம் ஸ்பிரே அடிக்கக் கூடாது. .சி இருக்கும் அறையில் அதிக பொருள்களை வைக்க வேண்டாம்.

.சி பயன்படுத்தும் போது அதிக டிகிரியில் வைக்க கூடாது. .சி பயன்பாட்டுக்கென அறிவுறுத்தியுள்ள 23-24 டிகிரி இடைவெளியில் பயன்படுத்த வேண்டும். 22 டிகிரிக்கு கீழ் வைக்க கூடாது. அதே போன்று ஏ.சி பயன்படுத்தும் போது அறையில் ஃபேனையும் ஓடவிடக்கூடாது. இதனால் ஃபேனில் இருக்கும் தூசிகள் ஏ.சியின் உள்ளே செல்ல வாய்ப்புண்டு.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி சர்வீஸ் செய்ய வேண்டும். குளிர்காலம் முடிந்து நீண்ட நாள்கள் கழித்து ஏ.சியை பயன்படுத்தும் போது ஏ.சியை சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். .சி சர்வீஸ் செய்யும் போது கம்ப்ரஸர்,காயில், .சியின் உள்ளே செயல்படும் ஃபேன் மோட்டார்கள், உள்ளிருக்கும் பெல்ட், கேஸ் அளவு அனைத்தையும் சரிபார்ப்பதும் அவசியம். சர்வீஸ் காலத்துக்கு இடையே அவ்வபோது ஏ.சி பில்டரை சுத்தம் செய்தால், குளிர்ச்சி அதிகரிக்கும்.

செய்ய வேண்டியவை

1 .எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற முறையான ஸ்டெப்லைசர் பயன்படுத்த வேண்டும்

2 குளிர்காலத்தில் பெரிதாக பயன்படுத்தாத ஏ.சி.யை, சர்வீஸ் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்

3 மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்தல் வேண்டும்

4 அதிக மின்சார வாட்ஸ் தாங்கக்கூடிய தரமான பிளக், சுவிட்ச், கேபிள் ஆகியவை பயன்படுத்த வேண்டும்

5 ஏசி கருவியை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.

6 அறையின் அளவிற்கு ஏற்ற செயல் திறன் கொண்ட ஏ.சி யை பயன்படுத்துதல் வேண்டும்.

செய்யக் கூடாதவை:

1 விலை குறைந்த மலிவான தரமற்ற ஸ்டெப்லைசர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

2 பல நாட்களாக செயல்படாமல் இருந்த ஏ.சியை அப்படியே உபயோகிப்பது கூடாது

3 சர்வீஸ் செய்யாமல் இயக்குதல் கூடாது

4 உயர் மின் அழுத்தத்தை தாங்க முடியாத கேபிள், சுவிட்ச் ஆகியவற்றை பயன் படுத்துதல் கூடாது

5 பழுது ஏற்படும் போது மட்டுமே பரிசோதிப்பது சரியல்ல.

6 பெரிய அறைக்கு, குறைந்த செயல் திறன் கொண்ட ஏ.சியை பயன்படுத்துதல் கூடாது ஏசி பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry