தனுஷ், விஜய் சேதுபதி, ஒத்த செருப்புக்கு தேசிய விருது! வேறு யாரெல்லாம் தேர்வு? முழுப்பட்டியல் இதோ!

0
11

சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தனுஷ் தேர்வாகியுள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறுகிறார்.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.  சிக்கிம் மாநிலம் சிறந்த சினிமா ஃபிரண்ட்லி ஸ்டேட் என்ற விருதை வென்றுள்ளது.

சிறந்த விமர்சகர்சோஹினி சட்டோபத்யா

சிறந்த அனிமேஷன் படம்ராதா

சிறந்த கல்வித் திரைப்படம்: ஆப்பிள்ஸ் அன்ட் ஆரஞ்சஸ்

சிறந்த தமிழ் படம்அசுரன் 

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகர்மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி)

சிறந்த நடிகைகங்கனா ரனாவத் (பங்கா, மணிகர்னிகா)

 

சிறந்த இயக்குநர்சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பஹத்தர் ஹூரைன், இந்தி)

சிறந்த படம்மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் (மலையாளம்)

சிறந்த நடன அமைப்பாளர்ராஜு சுந்தரம் (மஹர்ஷி, தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர்டி.இமான் (விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர்விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகைபல்லவி ஜோஷி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி)

 

சிறந்த குழந்தை நட்சத்திரம்நாக விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

சிறந்த வசனகர்த்தாவிவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி

சிறந்த ஒளிப்பதிவுகிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த ஒலிக்கலவைரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு சைஸ் 7)

சிறந்த அறிமுக இயக்குநர்மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம்கஸ்தூரி (இந்தி)

சிறந்த படத்தொகுப்புநவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)

சிறந்த பாடகர்பி.பராக்(கேசரி, இந்தி)

சிறந்த பாடகிசவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)

சிறப்பு பிரிவு ஜூரி விருதுஒத்த செருப்பு சைஸ் 7

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry