ஒரு கிராம் தேள் விஷம் ரூ.7 லட்சம்! மருந்து நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்து கோடீஸ்வரரான இளைஞர்!

0
131

நம்ப முடியாதுதான்! ஆனால் உண்மையை நம்பித்தானே ஆக வேண்டும். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர், தேளைப் பிடித்து, அதன் விஷத்தை எடுத்து, கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.

எகிப்தைச் சேர்ந்த முஹமத் ஹமிதி பாஷ்டா என்பவர்தான் அந்த முன்னுதாரண இளைஞர். தொல்லியல் துறையில் இளங்கலை படித்து வந்த அவர், படிப்பை பாதியில் கைவிட்டார். அடுதத்து என்ன செய்யலாம் என அவர் யோசித்தபோது, தேள்களின் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துகளுக்கு மேலை நாடுகளில் அதிக மவுசுள்ளதை அறிந்தார். இதையடுத்து பாலைவனங்களில் தேள்களை தேடித் தேடி பிடிக்கத் தொடங்கினார்.

25 வயதில் முஹமத் ஹமிதி பாஷ்டா, Cairo Venom Company-யின் உரிமையாளராக வளர்ந்துள்ளார். எகிப்தில் பல்வேறு இடங்களில் பண்ணைகள் மூலம் 80 ஆயிரம் தேள்களையும், பாம்புகளையும் அவர் வளர்த்து வருகிறார். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பையும் அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

யு.வி. லைட் மூலம் தேள்களை பிடித்து விஷத்தை பிரித்தெடுக்கும் பாஷ்டா, அதை ஐரோப்பா, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார். விஷமுறிவு மருந்துகள் தயாரிக்க தேள்களின் விஷத்துக்கு டிமாண்ட் உள்ளது. ஒரு கிராம் தேள் விஷத்திலிருந்து 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டோஸ் விஷமுறிவு மருந்துகள் தயார் செய்யலாம். உயர் ரத்த அழுத்த மருந்துகளுக்கும் தேள்களின் விஷம் பயன்படுத்தப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry