நீங்க சிகரெட் பிடிப்பவரா? புற்றுநோயில் இருந்து தப்பிக்க இந்த 7 டெஸ்ட்டும் உடனே செஞ்சுக்கோங்க..!

0
109
People who smoke tend to lose lives more than 10 years earlier than people who don’t. Isn’t it alarming? Smokers are more susceptible to many life-threatening conditions, from cancer and lung disease to heart disease and diabetes. Getty Image.

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்திருந்தும், இந்தப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புகையிலையில் நிக்கோட்டின் என்னும் ரசாயனம் மட்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் புகையிலையில் கிட்டதட்ட 5000 க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் இருக்கின்றன. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

Global Action To End Smoking செய்திக்குறிப்பின்படி, உலகிலேயே அதிக புகை பிடிப்பவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 20 கோடியே 53 லட்சம் பேர் (20.2 கோடி ஆண்கள் மற்றும் 5.35 கோடி பெண்கள்) புகையிலை பொருள் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். புகையிலை பயனர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலக அளவில் இந்தியா 2வது இடத்திலும், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் முதலிடத்திலும் இருக்கிறது.

Also Read : சிகரெட் புகைப்பவர்கள் கட்டாயம் படிங்க! சிகரெட் தயாரிக்க ஆண்டுக்கு 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!

இந்தியாவில் உள்ள ஆண்கள் எண்ணிக்கையில் 29% பேர் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். இதில் 13 – 15 வயதுக்கு உள்பட்ட 8.4% பேர் புகைக்கும் பழக்கம் உள்ள சிறார்கள். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதத்தினரை விட இந்துக்களும், முஸ்லிம்களும் புகையிலை பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கம் இளைஞர்களிடம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், உங்கள் உடலில் புகைபிடிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை கண்காணிக்க, சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Getty Image

மார்பு எக்ஸ்ரே: புகைப்பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த சோதனை அவசியம். Chest X ray உங்கள் நுரையீரலில் ஏற்பட்டுள்ள சேதத்தை அளவிட மருத்துவர்களுக்கு உதவும். தவிர, இது இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றிய தகவல்களைப் பெற உதவுகிறது. புகைபிடிப்பவரின் நுரையீரலில் மிகவும் பாதிக்கப்பட்ட தமனிகள் மற்றும் பிற நுரையீரல் புற்றுநோய் தொடர்பான நோய்கள், இரத்த நாள பிரச்சினைகளை இதன் மூலம் கண்டறியலாம்.

Also Read : நீங்க புகைப்பிடிப்பவரா? இந்த 9 உணவும் உங்க ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்! A Diet to Support Smokers!

நுரையீரல் செயல்பாட்டு சோதனை (ஸ்பைரோமெட்ரி): ஸ்பைரோமெட்ரி என்பது உங்கள் நுரையீரல் எப்படி செயல்படுகிறது என்பதை அளவிடும் சோதனை ஆகும். இந்த எளிய சுவாசப் பரிசோதனையானது, நோயாளியின் நுரையீரலுக்கு உள்ளேயும், வெளியேயும் எவ்வளவு காற்று நகர்கிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது. குறிப்பாக புகைபிடிப்பவர்களை பாதிக்கும் COPD(Chronic Obstructive Pulmonary Disease) போன்ற நோய்களை இது ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. சிஓபிடி என்பது நுரையீரலின் காற்றுப்பாதைகள் அல்லது பிற பாகங்களில் ஏற்படும் சேதம் ஆகும். இந்த சேதம் காற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் சுவாசத்தை கடினமாக்குகிறது.

Getty Image

லோ-டோஸ் CT ஸ்கேன்: புகைப்பிடிப்பவர்களுக்கு, குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது நீண்ட நாட்களாக புகைபிடித்தவர்கள், நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய ஆண்டுதோறும் Low-Dose CT Lung Cancer Screening Test எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது நுரையீரல் புற்றுநோய் போன்ற முக்கிய பிரச்சனைகளை கண்டறிய உதவுகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதன் ஆபத்துகளை குறைக்க உதவுகிறது. இந்த ஸ்கேன் நுரையீரலின் விரிவான படத்தை வழங்குகிறது.

கார்டியாக் ஸ்கிரீனிங்: கார்டியோவாஸ்குலர் நோய்க்கான முக்கிய ஆபத்து காரணங்களில் ஒன்று புகைபிடித்தல் ஆகும். எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி), லிப்பிட் ப்ரோஃபைல் மற்றும் இரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற வருடாந்திர கார்டியாக் ஸ்கிரீனிங்கள் இதில் அடங்கும். இந்தச் சோதனைகளானது, உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மதிப்பிடவும், புகைப்பிடிப்பவர்களுக்கு பொதுவாகக் காணப்படும் Coronary artery disease (CAD), உயர் இரத்த அழுத்தம் அல்லது அரித்மியா போன்றவற்றை கண்டறியவும் உதவுகின்றன.

Getty Image

கம்ப்ளீட் பிளட் கவுண்ட் (சிபிசி) : CBC சோதனை மூலம் உங்கள் இரத்தத்தில் புகைபிடிப்பதால் ஏற்படும் அசாதாரணங்களை அடையாளம் காண முடியும், அதாவது, வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை, வீக்கம் அல்லது ஹீமோகுளோபின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை இதில் அடங்கும்.

வாய் புற்றுநோய் ஸ்கிரீனிங்: புகைப்பிடிப்பவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. பல் மருத்துவர் அல்லது புற்றுநோய் மருத்துவரிடம் ஆண்டுதோறும் வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இது வாய், தொண்டை அல்லது நாக்கில் புற்றுநோய் புண்களை முன்கூட்டியே கண்டறிந்து, ஆரம்ப கட்ட சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது.

கல்லீரல் செயல்பாட்டு சோதனை (LFT): புகைபிடிக்கும் நபர்கள், குறிப்பாக ஆல்கஹால் குடிக்கும் நபர்களுக்கு கல்லீரலின் செயல்பாடு பாதிக்கபடலாம். எனவே ஆண்டுதோறும் Liver Function Test மேற்கொள்வது அவசியம். இது கல்லீரல் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து, ஆரம்ப சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry