உலகளவில், சுற்றுச்சூழல் நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. மனித சமுதாயத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பருவநிலை மாற்றம் உருவாகி, அதன் தாக்கங்களை பிற உயிரினங்களும் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த வகையில் உலகின் குப்பைத் தொட்டியாக கடல் மாறிக் கொண்டே இருக்கிறது. கடலில் எண்ணற்ற கழிவுகள் கலந்து வருவதால், கடல்வாழ் உயிரினங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலை அணியலாம்? ஒரிஜினலா என கண்டுபிடிப்பது எப்படி? அணிந்துகொள்ளும் முறை என்ன?
தற்போது நாகரீகமாக மாறி வரும் கருங்காலி மாலை, எதிர்மறை ஆற்றல்களில் இருந்து நம்மை பாதுகாத்து நேர்மறை ஆற்றலை மேம்படுத்துகிறது. கருங்காலி ஒரு சக்திவாய்ந்த பக்தி, மருத்துவம் மற்றும் அதிசயங்கள் செய்யக்கூடிய ஒரு அற்புதமான மரம். கருங்காலியின் பல்வேறு பண்புகள் மகத்தானவை. கருங்காலி மரம் மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அலைகளை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. கோவில் கோபுரங்கள், கோவில் விக்ரஹங்கள், சிலைகள், குச்சிகள் மற்றும் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் என பல இடங்களில் கருங்காலி மரம் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்விக்கி, சொமோட்டோவுல மதுவகைகளும் ஆர்டர் செய்யலாம்! தமிழக அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற ஆன்லைன் தளங்களில் மதுபானங்களை விற்க அனுமதிப்பது குறித்து பல மாநிலங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
மின் கட்டண உயர்வுக்கு ஈபிஎஸ் கண்டனம்! சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலினால் மக்கள் வேதனையில் துடிப்பதாக குற்றச்சாட்டு!
“வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்.” என்று மின் கட்டண உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீட்டில் பாம்பு நுழையாமல் இருக்க இதைச் செய்தாலே போதும்..! ஜூலை 16ல் உலக பாம்புகள் தினம் கடைப்பிடிப்பதன் நோக்கம்..!
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். உண்மையில், பாம்புகளின் அழிவுக்கு அவற்றின் மீதான இத்தகைய அச்சமும் பயமுமே முக்கியக் காரணமாக இருக்கிறது. பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 16ம் தேதி(இன்று) உலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள 10 வெஜ் உணவுகள்! யார் யாருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை?
நமது உடல் ஆரோக்கியமாக செயல்பட இரும்புச்சத்து அவசியம். சிவப்பு ரத்த அணுக்களில் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து பற்றாக்குறை ரத்த சோகைக்கு வழிவகுக்கும். சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம். கீரை இரும்புச்சத்து நிறைந்த உணவுதான் என்றாலும், அதைவிட அதிக இரும்புச்சத்து உள்ள வேறு பல உணவுகளும் உள்ளன.
கருத்தரித்தலை சவாலாக்கும் PCOS! மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா? பிசிஓஎஸ் பற்றிய தெளிவான விளக்கம்!
4.00 Mins Read : உலகளவில் லட்சக்கணக்கான பெண்களை பாதிக்கும் ஒரு பிரச்சனை தான் PCOS என அழைக்கப்படும் சினைப்பை நோய்க்குறி. குண்டாக இருக்கும் பெண்களிடம் இப்பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. பிசிஓஎஸ்(பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) பிரச்சனையைக் கொண்ட பெண்கள் கருத்தரிப்பது என்பது சற்று சவாலாகவே இருக்கும்.
