பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கீர் ஸ்டார்மர், நாம் சாதித்துவிட்டோம், மாற்றம் இப்போது தொடங்குகிறது என்று கூறினார். தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.
மலையில் பயணிக்கும்போது காரில் ஏ.சி. போடலாமா? கூடாதா? மைலேஜை முன்னிலைப்படுத்தும் அறிவியல் விளக்கம்!
காரில் மலை ஏறும்போது ஓட்டுநர்கள் எரிபொருள் செயல்திறனைக் கருத்தில் கொள்ளுவார்கள். மலைப் பயணங்களின் போது காரில் ஏசி-யை ஆன் அல்லது ஆஃப் செய்து வைப்பது சிறந்ததா என்ற குழப்பம் ஓட்டுநர்களிடையே நிலவுகிறது.
கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு பாக்டீரியாக்கள்..! குடிநீர் பாட்டில் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வுகள்!
மீண்டும் பயன்படுத்தக்கூடிய, முறையாக சுத்தம் செய்யப்படாத குடிநீர் பாட்டில்களில் கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. முறையாக சுத்தம் செய்யப்படாத தண்ணீர் பாட்டில்களில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற பல நுண்ணுயிரிகள் குவிந்து, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் செயல்பாட்டை ஆய்வு செய்து உண்மையை உணர வேண்டும்! முதலமைச்சருக்கு அண்ணாமலை வேண்டுகோள்!
மானம் காத்திட வீதிக்கு வராவிட்டால் காலிப் பணியிடம் மட்டுமல்ல; பணியாற்றிக் கொண்டிருக்கும் இடமும் விலை மதிப்பீட்டை பொறுத்து மாறும் அபாய சூழ்நிலை வெகு தூரத்தில் இல்லை என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார்.
