உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளில் பாராசிட்டமால் மாத்திரைகள் முக்கியமானவை. ஆனால், இவை பெரும்பாலும் குறைந்துவரும் புதைபடிவ எரிபொருட்களை (fossil fuels) நம்பியே தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற, எடின்பர்க் பல்கலைக்கழக(University of Edinburgh’s Wallace Lab) ஆராய்ச்சிக் குழு, புதிய மாற்று வழியைக் கண்டறிந்துள்ளது.
முதல்வரின் தொகுதியில் திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம்: ‘காவல்துறை விசாரணை மீது சந்தேகம்’ – எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு!
சென்னையில், ‘திருமலா’ பால் நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி மர்மமான முறையில் இறந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்துக் கடும் கேள்விகளை எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
10 நிமிடத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஒளி சிகிச்சை! மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சி!
மருத்துவ உலகில் புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு புதிய புரட்சிகர வழி தற்போது உருவாகியுள்ளது. “மூலக்கூறு ஜாக் ஹேமர்கள்” (Molecular Jackhammers) எனப்படும் இந்த நவீன தொழில்நுட்பம் மூலம், புற்றுநோய் செல்களை மிக துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் அழிக்க முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய வரலாற்றுப் பக்கம் என்று சொல்லலாம்.
கோவில் நிதியை சுரண்டுவது நியாயமா? கோவை மாநகரில் எடப்பாடியார் ஆவேசம்! திமுக மீது மக்களுக்கு வெடிக்கும் கோபம்!
“மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் மாபெரும் மக்கள் திரளை ஈர்த்து, திமுக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை அப்பட்டமாகப் பறைசாற்றியது. இந்த எழுச்சியைக் கண்ட எதிரணிக் கட்சிகள் பீதியில் உறைந்து போயுள்ளதை, எடப்பாடி பழனிசாமி அவர்களின் பேச்சு உறுதிப்படுத்தியது.
பொது வேலைநிறுத்தம்: அமைதியாக இருந்த மத்திய அரசு! ஆதரித்த கேரள அரசு… ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் கோபமானது ஏன்? ஐபெட்டோ கேள்வி!
தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி! நமது உரிமைகளுக்காக, இந்த நாட்டின் முதுகெலும்பாகிய தொழிலாளர் தோழர்கள் இன்று தேசம் தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள், தனியார்மயமாக்கல் வெறி, மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, தொழிற்சங்கங்கள் ஓங்கி ஒலித்த குரல், ஆட்சியாளர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை.
கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? உண்மையை சொல்லும் உணவியல் நிபுணர்கள்!
பிரட் ஆம்லெட், சீஸ் ஆம்லெட், முட்டைப் பராத்தா, பொரித்த முட்டை, முட்டைக் கறி – இவற்றை சாப்பிட விரும்பாத அசைவப் பிரியர்கள் உண்டா? முட்டை என்பது மலிவான, உயர் புரதம் நிறைந்த ஒரு அற்புதமான உணவாகும். இது வெறும் புரதத்திற்காக மட்டுமல்ல, வைட்டமின் டி, வைட்டமின் பி, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
