Monday, July 7, 2025
Home Blog Page 18

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி திடீர் ஓய்வு! இதயம் நிறைந்த நன்றி என நெகிழ்ச்சிப் பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான கோலி, 14 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி, பல சாதனைகளை படைத்துள்ளார்.

இளநீர் vs கரும்பு ஜூஸ்..! கோடை வெயிலை சமாளிக்க இரண்டில் எது பெஸ்ட்?

கோடை வெயில் நாளுக்கு நாள் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. வெயில் தாக்கத்தை சமாளிக்க நாம் பெரும்பாலும் தர்பூசணி, மோர், இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் குடிப்பது வழக்கம். கொளுத்தும் வெயிலில் ஒரு கிளாஸ் ஜூஸ் குடிப்பது சோர்வு குறைந்து உடலை குளிர்விக்கும்.

ஆபரேஷன் சிந்துார் : பாக். அணு ஆயுத தளம் மீது தாக்குதல்! உலக நாடுகளை பிரமிக்க வைத்து வெற்றி பெற்ற இந்திய ராணுவம்! முழுமையான தகவல்!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்துார்’ ஒரு மகத்தான வெற்றியாக முடிவடைந்துள்ளது. இதனா நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட மனதுடன் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பங்களித்த ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Guru Peyarchi 2025: துலாம் முதல் தனுசு வரை..! குருபெயர்ச்சி பலன்கள் Part – 3

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லவே வேண்டாமா? நிபுணர்களின் பதில் என்ன?

ஆரோக்கிய வாழ்விற்காக தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை போதுமானதா? மருத்துவர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையா? என்ற கேள்விகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. உணவுப்பழக்கங்களால் தேவைப்படும் சத்துகள் குறைவாக கிடைப்பதால், பலரும் வைட்டமின் மற்றும் தாதுக்களால் நிரம்பிய சப்ளிமென்டுகளை தினசரி எடுத்துக்கொள்கின்றனர்.

மின்டெல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, மூன்றில் இரண்டு பங்கு நுகர்வோர் வழக்கமாக வைட்டமின் மாத்திரைகள் அல்லது சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் தங்களிடம் எந்த சத்துப் பற்றாக்குறையும் இல்லாதபோதும், உடல்நலம் மேம்படுமேனும் நம்பிக்கையோடு இதை பயன்படுத்துகிறார்கள்.

Also Read : நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் அவசியம்? Vitamin B6 உள்ள உணவுகள் எவை?

 வைட்டமின் மாத்திரைகள் – உண்மையான தேவை இருக்கிறதா?

13 அடிப்படை வைட்டமின்கள் நம் உடலுக்கு தேவை. அவற்றை உணவிலிருந்து பெற முடியாதபட்சத்தில் மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வது ஆலோசிக்கப்படுகிறது. எனினும், இதற்கான மருத்துவ பரிசோதனை இல்லாமல் எடுத்துக்கொள்ளுவது பல நேரங்களில் தேவையற்றதும், இடையூறு உண்டாக்கக்கூடியதுமான முடிவுகளை தரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 வைட்டமின்களின் வகைகள்:

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்: A, D, E, K – உடலில் சேமிக்கப்படுவதால் அதிக அளவில் எடுத்தால் சிக்கல்கள் ஏற்படலாம்.

நீரில் கரையும் வைட்டமின்கள்: B குழு, C – சேமிக்கப்படாது. தேவையை விட வைட்டமின் சி அதிகமாக எடுத்தால் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

Also Read : வைட்டமின் பி12 அதிகமானால் கேன்சர் வரலாம்! Vitamin B12: Overdose and Side Effects

 உணவிலிருந்து கிடைப்பதே போதுமானதா?

பல்வேறு வகையான மல்டிவைட்டமின் மாத்திரைகள் கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்களையும் கொண்டிருப்பதால், உணவிலிருந்தே இவை கிடைக்கவில்லையெனில் மாத்திரைகள் ஒரு மாற்றுத் தேர்வாக இருக்கலாம்.

உதாரணமாக:

  • கால்சியம் – தினமும் 700 mg தேவை.
  • துத்தநாகம் (Zinc) – ஆண்களுக்கு 9.5 mg, பெண்களுக்கு 7 mg தேவை.
  • இரும்புச்சத்து – பெண்களுக்கு 14.8 mg, ஆண்களுக்கு 8.7 mg தேவை.

❖ யாருக்கெல்லாம் சப்ளிமென்ட் தேவைப்படும்?

  • வயதானவர்கள், வீட்டிலேயே இருப்பவர்கள் – வைட்டமின் D மற்றும் கால்சியம்.
  • சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்பவர்கள் – B12 மற்றும் கால்சியம்.
  • பசி குறைவோடு வலுவிழந்தவர்கள் – மல்டிவைட்டமின் மாத்திரைகள்.
  • மாதவிடாய் பிரச்னை உள்ள பெண்கள் – இரும்புச்சத்து (மருத்துவரின் ஆலோசனையுடன்).
  • கர்ப்பிணிகள் – ஃபோலிக் அமிலம் (மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில்).

❖ வைட்டமின் சி – உண்மையான சூப்பர் ஹீரோவா?

வைட்டமின் C ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்புகளால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என நம்பப்படுவதாலும், காய்ச்சல், சளி போன்றவற்றை தடுக்கும் என சொல்லப்படுவதாலும், மக்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இவை தொடர்பான நிரூபணங்கள் மிகவும் குறைவானவை. ஒரு நெல்லிக்காயில் 100-600 mg வரை விட்டமின் சி இருக்கிறது. இதனால், இயற்கையான பழங்கள், காய்கறிகள் மூலம் தினசரி தேவையைப் பெற முடியும்.

Also Read : மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? மாம்பழம் கிடைக்கும் காலத்தில் வைட்டமின்-ஏ சேமித்து வையுங்கள்!

 Bottom Line:

நிபுணர்கள் கூறுவதாவது:

  • ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன், விட்டமின் D தவிர மற்ற அனைத்தும் உணவிலிருந்து பெற முடியும்.
  • உணவில் சிலவற்றை தவிர்ப்பவர்கள், குறிப்பிட்ட சத்துக்களுக்கு மாத்திரை எடுக்கலாம்.
  • தவிர, ஒரே மாத்திரையால் எல்லா சிக்கல்களும் தீரும் என்பது தவறான எண்ணம்.
  • மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த சப்ளிமென்டும் தொடர்ந்து எடுக்க வேண்டாம்.

சுயமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைவிட, சமச்சீர் உணவுப்பழக்கத்துடன், நிபுணர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுவதே நீண்டகால ஆரோக்கியத்திற்கு உங்களை இட்டுச்செல்லும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

🔴 BIG BREAKING..! தாக்குதல்களை நிறுத்துவதாக பாகிஸ்தான் நாடகம்! காஷ்மீரில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்! தக்க பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்!

ஆபரேஷன் சிந்தூரில் நாம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளோம். குறிப்பாக பாகிஸ்தானின் முக்கிய வான்வெளி சொத்துக்களை குறிவைத்து செயலிழக்கச் செய்துள்ளோம். ராவல்பிண்டியில் உள்ள முக்கியமான நூர் கான் விமான தளம் உட்பட அவர்களின் நான்கு விமான தளங்கள் மீது நாம் நடத்திய தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

Guru Peyarchi 2025: கடகம் முதல் கன்னி வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 2

இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

antalya bayan escort