சிவகங்கை: ஜூன் 30, 2025 – தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே காவல் நிலைய மரணங்கள் அதிகரித்து அதுதொடர்பான அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிகழ்ந்துள்ள 25வது காவல் நிலைய கொலையாகப் பதிவாகியுள்ள, சிவகங்கையைச் சேர்ந்த அஜித் குமாரின் (27) மரணம், காவல்துறை ‘சிறப்புப் படையினரின்’ அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் நிகழ்ச்சியில் மாணவர்கள் மீது ‘அதிகார அத்துமீறல்’: அரசும், போலீசும் சட்டத்தை மீறினார்களா?
தமிழக அரசியல் களத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், சென்னையின் மையப்பகுதியில் அரங்கேறிய ஒரு சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பசியோடு நின்று கடன் கேட்கிறோம்… NOC, சிபில் ஸ்கோர் கேட்கிறார்கள்!” – புதிய விதிகளால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அவலம்!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். கூட்டுறவு வங்கிகள், “வேறு வங்கிகளில் பயிர்க்கடன் நிலுவையில் இல்லை” என்ற சான்று அல்லது சிபில் அறிக்கை (CIBIL Report) வழங்கினால்தான் கடன் தருவோம் எனக் கடுமையாக நெருக்கடி கொடுக்கின்றன. இதனால், விவசாயிகள் தங்கள் சாகுபடி வேலைகளைத் தொடங்க முடியாமல் திணறி வருகின்றனர்.
டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்! பலர் இவ்வளவு நாள் செய்யும் பெரிய தவறு!
தேநீர் என்பது பலருக்கும் பிடித்தமான ஒரு பானம். காலையில் தொடங்கி மாலை வரை பலர் தேநீரை எண்ணிக்கை இல்லாத அளவிற்கு அதிகம் அருந்துகிறார்கள். ஆனால், சில உணவுகளை தேநீருடன் சேர்த்து உண்ணும்போது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மார்பகப் புற்றுநோயை வெல்லும் புதிய மருந்து: வாழ்நாளை இரட்டிப்பாக்கும் கேபிவசெர்டிப்!
சமீபத்தில் கண்டறியப்பட்ட கேபிவசெர்டிப் (Capivasertib) என்ற புதிய மருந்து, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த மருந்து, புற்றுநோயாளிகளின் வாழ்நாளைக் குறிப்பிடத்தக்க அளவில் நீட்டிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது, வேல்ஸில் உள்ள மருத்துவமனைகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இது முதன்முறையாக வழங்கப்பட்டு வருவது, மருத்துவ உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது.
