‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நாடாளுமன்ற மக்களவைக்கும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகுக்கக் கூடியது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கான ஒரு பெரிய முன்னேற்றம் என்று பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் இதுதொடர்பான மசோதாக்களை கடந்த 17ந் தேதி தாக்கல் செய்தார்.
கேரளாவின் குப்பைமேடாக மாறிவிட்ட தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள்! அடகு வைக்கப்படுகிறதா தமிழர்களின் நலன்?
திடீரென வேகம் பிடித்திருக்கிறது கேரளா கொட்டிவரும் மருத்துவக் கழிவுகள் தொடர்பான விவகாரம். எங்கு பார்த்தாலும் அது குறித்த செய்திகள் அனல் பறக்கிறது. முன்னணி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்களில் எல்லாம், மருத்துவக் கழிவுகள் தொடர்பான விவாதங்களை கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடத்தி வருவதை பார்க்கும் போது, இனியாவது விடிவு பிறக்குமா என்கிற கேள்வி எழுகிறது.
சிவப்பு அவல்! ஆச்சரியப்படும் அளவுக்கு கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!
சமீப காலமாக சிவப்பு அவல் சத்தானதொரு உணவுப் பொருளாக மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இது பாரம்பரிய இந்திய உணவு பொருள். இது சுவையானது மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. தினசரி உணவில் சிவப்பு அவலை சேர்ப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, அதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாரம் இரண்டு முறை சிவப்பு அவல் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மண் இழந்த கதைகள் – 1. கேரளத்தால் ‘தேவிகுளம்’ பறிக்கப்பட்ட கொடுங்கதை!
தேவிகுளம் தாலுகாவில் நிரந்தரமாக வசிக்கும் தமிழர்கள் வெறும் 26 விழுக்காடுதான், மற்ற 46 விழுக்காடு தமிழர்கள், தினசரி வந்து போகக்கூடிய கூலிக்காரர்களே என்று, மொழி வழி பிரிவினை கமிட்டியிடம், கே. எம். பணிக்கர் முன்வைத்த வாதம் எத்தனை போலியானது என்பதை இன்று அம்பலப்படுத்துகிறேன்.
கொய்யா பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் வியக்கத்தகு நன்மைகள்! கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. இதனுடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் 300 மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது.
பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் பட்டாணி சாதம்! எளிமையாக செய்யும் முறை! Peas Coriander Rice!
வீட்டில் பட்டாணியும், கொத்தமல்லியும் இருக்கா? அப்படியானால் அவற்றைக் கொண்டு பிரியாணியே தோற்கும் அளவும் சுவையான ஒரு ரைஸ் செய்யலாம். இந்த கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாகவும் இருக்கும்.
