வெண்டைக்காய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காயாகும். வெண்டைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு நல்லது. அதன் மலமிளக்கும் பண்பின் காரணமாக மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
வெண்டைக்காயை தொடர்ந்து உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி, வெண்டைக்காய் தண்ணீரை காலையில் தவறாமல் குடிப்பது, இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. வெண்டைக்காய் நுகர்வு எடையை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், கண்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.
Also Read : மருத்துவ குணம் நிறைந்திருக்கும் வெள்ளை பூசணி ஜுஸ்..! மந்திர மருந்தில் ஒளிந்திருக்கும் நம்ப முடியாத நன்மைகள்!
‘லேடிஸ் பிங்கர்’ என்று அழைக்கப்படும் வெண்டைக்காயில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாவதோடு, ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து, உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம். இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.
இப்படிப் பல நன்மைகள் வெண்டைக்காயில் இருந்தாலும் கூட எதையும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது எனக் கூறுவார்கள். வெண்டைக்காய்தானே என அதை அதிகமாக சாப்பிடக்கூடாது. அதனால் பல பிரச்னைகள் வரும் என்பது தெரியுமா? வெண்டைக்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாக காணப்படுகின்றன. இது உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது.
வெண்டைக்காயில் எண்ணற்ற நன்மைகள் இருந்தபோதிலும், சிலர் அதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். யாரெல்லாம் வெண்டைக்காயை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து விரிவாக காண்போம்.
Also Read : நீரிழிவு நோயாளிகள் சுகர் ஃப்ரீ எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?
ஒவ்வாமை பிரச்னை : பொதுவான அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் ஒருபோதும் வெண்டைக்காய் சாப்பிட வேண்டாம். அதுபோல் கொக்கோ மற்றும் செம்பருத்தி பூ அலர்ஜி உள்ளவர்கள் வெண்டைக்காயை சாப்பிட கூடாது. இதன் காரணமாக நீங்கள் தோல் பிரச்னைகள் அல்லது இரைப்பை குடல் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சிறுநீரக கற்கள் பிரச்னை : சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் ‘லேடிஸ் பிங்கர்’ என்று அழைக்கப்படும் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது. குறிப்பாக உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருந்தாலோ அல்லது இதற்கு முன் இந்த பிரச்சனை இருந்தாலோ வெண்டைக்காயை சாப்பிடவே கூடாது. சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் ஆக்சலேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். வெண்டைக்காயில் ஆக்சலேட் போதுமான அளவில் காணப்படுவதால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Also Read : இரவில் சாப்பிடக்கூடாத 25க்கும் மேற்பட்ட உணவுகள்! நிம்மதியாக தூங்க இதை செய்துதான் ஆக வேண்டும்!
இரைப்பை குடல் பிரச்னை : இரைப்பை குடல் பிரச்னைகள் இருந்தால், உதாரணமாக, நீங்கள் அடிக்கடி வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், குடல் ஆரோக்கியமாக இல்லை என்றால், வெண்டைக்காயை தவிர்க்க வேண்டும். நீங்கள் வெண்டைக்காயை சாப்பிட்டால், அது உங்கள் உடலில் அதிகப்படியான வாயு மற்றும் வீக்கம் பிரச்சனையை ஏற்படுத்தும். அதன் காரணமாக நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நீரிழிவு நோயாளிகள் : வெண்டைக்காயில் நார்ச்சத்து நல்ல அளவில் காணப்படுவதால், அதன் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வெண்டைக்காயை உட்கொள்ளும் போது அதன் அளவைக் குறித்து நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், அதை உட்கொள்ளும் முன், நீங்கள் ஒருமுறை உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் வெண்டைக்காய் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதை சமைக்கும் போது அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டாம்.
இரத்தம் உறைதல் பிரச்னை உள்ளவர்கள் : வெண்டைக்காயில் வைட்டமின் கே காணப்படுகிறது. இது இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ஒருவருக்கு இரத்தம் உறைவதில் பிரச்னை இருந்தால், இதற்காக இரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொண்டு வந்தால், மருத்துவரிடம் ஆலோசிக்காமல் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் : வெண்டைக்காயை குழம்பில் போடுவதென்றாலும், பொறிப்பது என்றாலும் வெண்டைக்காயை வேக வைக்கவும், அதன் பிசுபிசுப்பு நீங்கவும் சாதாரண அளவை விட அதிக எண்ணெய் ஊற்றுகிறோம். இதனால் வெண்டைக்காய் இழுத்துக் கொள்ளும் அதிக அளவு எண்ணெயால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
சைனஸ் : உங்களுக்கு இருமல் மற்றும் சைனஸ் போன்ற பிரச்னைகள் இருந்தால் நீங்களும் வெண்டைக்காயைத் தவிர்ப்பது நல்லது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry