நீரிழிவு நோயாளிகள் சுகர் ஃப்ரீ எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?

0
33
Artificial sweeteners are chemicals used to sweeten foods and beverages. They provide virtually zero calories. Getty Image.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், டீ மற்றும் காஃபியில் செயற்கை இனிப்பான சுக்ரோலோஸ் கலந்து குடித்தால் அவர்களின் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இதனையடுத்து 12 வாரங்களுக்கு மேலாக, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 179 பேரைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் செயற்கை சர்க்கரையின் தாக்கம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செயற்கை இனிப்பான சுக்ரோலோஸ் (சுகர் ப்ரீ, நேச்சுரா போன்ற நிறுவனத்தின் செயற்கை இனிப்பூட்டிகள்), டைப் 2 நீரிழிவு உள்ளவர்களின் இதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய நாட்டின் முதல் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

Also Read : சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டீ மற்றும் காஃபியில் செயற்கை இனிப்பான சுக்ரோலோஸ் கலந்து குடித்தால் அவர்களின் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இதனையடுத்து 12 வாரங்களுக்கு மேலாக, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 179 இந்தியர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றனர்.

காஃபி மற்றும் டீ போன்ற தினசரி பானங்களில் சிறிய அளவு சுக்ரோலோஸைப் பயன்படுத்துவது ரத்த சர்க்கரை அளவை அல்லது HbA1c அளவை எதிர்மறையாக பாதிக்காது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. மேலும், இந்த ஆய்வில் உடல் எடை, இடுப்பு அளவு மற்றும் BMI ஆகியவற்றில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Also Read : சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?

செயற்கை இனிப்புகளை அன்றாட பானங்களில் பயன்படுத்தும்போது அவற்றின் விளைவுகள் குறித்து சிறிய டேட்டா கூட இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பலர் டீ மற்றும் காஃபியில் சர்க்கரையைப் பயன்படுத்துகின்றனர், இது அவர்களின் தினசரி சர்க்கரை நுகர்விற்கு பங்களிக்கிறது. இந்தியாவில் அதிகம் எடுத்து கொள்ளப்படும் வெள்ளை அரிசி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை போன்ற உணவுகளில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது.

மூத்த நீரிழிவு நிபுணரும், மோகன் டயாபடீஸ் சென்டர் நிறுவனரும், MDRF இன் தலைவருமான டாக்டர் வி மோகன் கருத்துப்படி, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பயன்படுத்தப்படும் பிரபலமான செயற்கை இனிப்புகளில் சுக்ரோலோஸும் ஒன்றாகும். எனவே, சர்க்கரை உட்கொள்ளும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்கள் சுக்ரோலோஸ் பற்றிய இந்த ஆய்வை மேற்கொண்டோம். ஆய்வில் பங்கேற்ற ஒரு குழுவினரை சர்க்கரை எடுத்து கொள்வதை தொடரவும், மற்றொரு குழுவிற்கு சர்க்கரைக்குப் பதிலாக சுக்ரோலோஸை எடுத்து கொள்ளவும் அறிவுறுத்தினோம், என்று அவர் கூறியுள்ளார்.

Also Read : செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!

இந்த ஆய்வில் சுக்ரோலோஸ் போன்ற செயற்கை இனிப்புகளை சாப்பிடுவதுவதால், அவர்களின் உடல் எடை, பிஎம்ஐ மற்றும் இடுப்பு சுற்றளவு குறைவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சராசரியாக எடை இழப்பு 0.3 கிலோ ஆகவும், பிஎம்ஐ 0.1 கிலோ/மீ² ஆகவும், இடுப்பு அளவு 0.9 செமீ ஆகவும் குறைந்துள்ளது. எனவே, சுக்ரோலோஸ் போன்ற செயற்கை இனிப்புகளை சாப்பிடுவது எந்த தீங்கும் விளைவிக்காது மற்றும் நன்மை அளிக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம் என்றும் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார். ஆனாலும் செயற்கை இனிப்புகள் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக பலராலும் நம்பப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry