சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?

0
77
What Happens When You Eat Sugar?

உடனடியாக தவிர்க்க வேண்டிய வெள்ளை சர்க்கரையும், பளபள உப்பும், அத்தியாவசிய பட்டியலுக்கு சென்று பாடாய்ப்படுத்துகிறது. நாங்கள் வெஜ் என காலரைத் தூக்கிவிடுபவரா நீங்கள்?, வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் நீங்களும் அசைவ உணவு சாப்பிடுபவர்தான்.

டாய்லட் கழுவப் பயன்படும் குளோரின், டி.ஏ.பி. உரம் தயாரிக்க பயன்படும் பாஸ்பரிக் அமிலம், சுண்ணாம்பு, சல்பர் டை ஆக்சைடு, பாலி எலக்ட்ரோலைட், காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா, சோடியம் ஹைட்ரோ சல்பேட், கால்சியம் ஹைட்ராக்சைடு இவற்றின் கலவைதான் வெள்ளை சர்க்கரை.

கரும்பிலிருந்து சாறு பிழிந்து பல படிநிலைகளில் அதன்மீது 100 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் வெப்பத்தை செலுத்தி ரசாயனங்களை கலக்கும்போது, நல்ல வைட்டமின்கள் காணாமல் போய்விடும். அதிலுள்ள கனிமங்கள், நுண் ஊட்டப்பொருள்களும் நீக்கப்பட்டுவிடும். குளுக்கோஸ், ஃப்ரூக்டோஸ், கரி மற்றும் அதில் சேர்த்த ரசாயனங்கள்தான் எஞ்சி இருக்கும்.

Also Read : செயற்கை இனிப்பூட்டிகள் ஆபத்தானவை என WHO அறிவிப்பு! போதிய ஆதாரங்கள் இல்லை என மறுக்கும் மருத்துவ நிபுணர்கள்!

இவற்றிலிருந்து பிரிக்கப்படும் பளபள சர்க்கரை நமது உடலுக்குள் சென்றவுடன், குளுக்கோஸ், ஃப்ருக்டோசாகப் பிரியும். நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கும் குளுக்கோஸ் சாதாரணமாக ஜீரணமாகிவிடும். ஆனால் ஃப்ருக்டோஸை, ஈரலால் அதாவது லிவரால் மட்டுமே ஜீரணிக்க முடியும். இதனால் ஈரல் பாதிக்கப்பட்டு இன்சுலின் தேவையான அளவு சுரக்காததால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, அதிக அளவு உணவை உட்கொள்ள வைக்கும் தன்மை ஃப்ருக்டோஸுக்கு உள்ளதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது தொற்றா நோய்களுக்கான கதவை திறந்துவிடுகிறது.

நீரிழிவை பணக்கார நோய் என்று முன்பு குறிப்பிடுவார்கள். ஏனென்றால் செல்வந்தர்கள் உடலுழைப்பின்றி உட்கார்ந்து சாப்பிடுவதால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வந்தது. இப்போது பேறு கால பெண்கள், டீன் ஏஜ் பருவத்தினர் முதற்கொண்டு, கடுமையான உடலுழைப்பு செய்பவர்களையும் நீரிழிவு நோய் விட்டுவைக்கவில்லையே ஏன்? உணவே மருந்து என்பது மாறி, ரசாயனமே உணவு என்று மாறியதுதான் இதற்குக் காரணம்.

Also Read : #InternationalYogaDay | மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்! இறை வடிவமாக உள்ள தமிழ் மொழி!

தொற்றா நோய்களுக்கு வாயிலாக இருப்பதில் முதலிடம் வெள்ளை சர்க்கரைக்குத்தான். அதில் கலக்கப்படும் ரசாயனங்கள் வயிற்றிலுள்ள கட் பயோமி எனும் நுண்ணுயிரியை பாதிப்பதால், உடலின் இயல்பு சமநிலை மாறுபடுகிறது. புற்றுநோய், உடல் பருமன், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பது, ஈரல் நோய், கிட்னி கோளாறு, சிறுநீரகக் கோளாறு, பதற்றம், மலச்சிக்கல், குழந்தையின்மை, எலும்பு பாதிப்பு, அல்சைமர், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, தாது குறைபாடு, கண், பல் கோளாறு இப்படி எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு கெடுதலையும் வெள்ளை சர்க்கரை செய்கிறது.

நமது உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு இனிப்பு சத்து தேவை. அரிசி, கிழங்கு, கீரை வகைகளில் உள்ள குளுக்கோஸ், ஃப்ரூக்டோஸ் என்ற வடிவில் செல்கள் இனிப்பை எடுத்துக்கொள்ளும். இது மெதுவாக ரத்தத்தில் கலக்கும் தன்மை கொண்டது. அறிவியல்படி கிளைசிமிக் இன்டெக்ஸ் மூலம் இதை குறியிடுவார்கள். (சர்க்கரை உடலில் கலக்கும் வேகத்தின் குறியீடு).

லெட்டின் ஹார்மோன்தான் வெள்ளைச் சர்க்கரைக்கு நம்மை அடிமையாக்குகிறது. இது பாதிக்கப்படும்போது சர்க்கரை அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடும்போது, அது உடனடியாக ரத்தத்தில் கலந்து செயல்படத்தொடங்கும். அப்போது செல்கள் துரிதமாகச் செயல்படத் தொடங்குவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஆனால், ரசாயனங்களால் செல்களை துரிதமாக இயங்கச் செய்வது நன்மையா? என சிந்திக்க வேண்டும்.

Also Read : கேடு விளைவிக்கும் ரீஃபைண்டு ஆயில்? சுத்திகரிக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன? Adverse Effects of Refined Oil!

சர்க்கரையை வெளிர் நிறமாக்க மாட்டு எலும்பு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கரும்புச் சர்க்கரையில் மாட்டு எலும்பு போன்ற அசைவ மூலப்பொருள்கள் சேர்ப்பதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்த முடியவில்லை.

சராசரியாக, நாளொன்றுக்கு பெண்கள் என்றால் 6 டேபிள் ஸ்பூன், ஆண்கள் என்றால் 9 டேபிள் ஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்க ஹார்ட் அசோஷியேன் பரிந்துரைக்கிறது. தயாரான ஆறு மாதத்துக்குள் சர்க்கரையை உபயோகப்படுத்தாவிட்டால், அதில் கலக்கும் சல்பர் டை ஆக்சைடு காரணமாக அது நஞ்சாக மாறிவிடும் என எச்சரிக்கப்படுகிறது. ரசாயன கலவைகளால் ஆன வெள்ளைச் சர்க்கரையைத்தான் நாம் இனிப்புச் சத்தாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ன? வளருவதற்கு தண்ணீர் கூட கேட்காத பனையில் இருந்து கிடைக்கும் வெல்லம் போதுமே..!

Featured Videos from VELS MEDIA

சமூகத்தை நினைத்து உன் வாழ்க்கையை வீணாக்காதே! ~ This Video will change your Life|K.Gopinath

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry