சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive

0
99
Myth Buster: Dishing the Details on Diabetes

தற்போதைய தலைமுறையினர் இயற்கையான இனிப்பை விட்டுக்கொடுத்து, உடலுக்குத் தேவைப்படுவதை விட அதிக அளவு வெள்ளை சர்க்கரை உட்கொள்வதைக் காண முடிகிறது. இதனால் சர்க்கரை மோசமானவையா என்றால், கண்டிப்பாக இல்லை. எல்லா சர்க்கரையும் தீங்கு விளைவிக்கும் என்பது மிகைப்படுத்தி கூறுவதாகும்.

குறிப்பாக சர்க்கரைக்கும், நீரிழிவு நோய் அல்லது குறைபாடுக்கும் இடையிலான உறவைப் பற்றி விவாதிக்கும்போது, பரவலான நம்பிக்கைக்கு மாறாக, நீரிழிவு நோய்க்கு சர்க்கரை மட்டுமே வில்லன் அல்ல. பொதுவாக நீரிழிவு நோய்க்கு, நுகரப்படும் சர்க்கரையின் அளவு மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய பிற காரணிகள் உள்ளன.

சர்க்கரை உடலை எவ்வாறு பாதிக்கிறது?

சர்க்கரை சாப்பிடும்போது உடலில் ஒரு சிக்கலான செயல்முறை உருவாகும். பெரும்பாலான சர்க்கரை துகள் சிறுகுடலில் உடைகின்றன. இங்கே, என்சைம்கள் சிக்கலான சர்க்கரை மூலக்கூறுகளை, குளுக்கோஸ், கேலக்டோஸ் மற்றும் பிரக்டோஸோக மாற்றுகின்றன. குளுக்கோஸை உடல் தசைகள் சேமிக்கும் அதேநேரம், கல்லீரலானது குளுக்கோஸை கிளைகோஜனாக சேமிக்கிறது. இவை உடலுக்குத் தேவைப்படும்போது ஆற்றலாக மாறும்.

Also Read : எருக்கன் இலை சர்க்கரை அளவைக் குறைக்குமா? பிரமிக்க வைக்கும் மருத்துவப் பயன்கள்! 12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும் தெய்வீக மூலிகை!

குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் நுழையும் போது, இரத்த குளுக்கோஸ் அளவு உயரும். அப்போது, கணையம் உடல் முழுவதும் குளுக்கோஸைக் கொண்டு செல்ல இன்சுலின் வெளியிடும். அதிக அளவு சர்க்கரையை உட்கொள்வதால், செல்கள் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கும். அதாவது, நம் உடலில் உள்ள செல்கள் இன்சுலின் சமிக்ஞையை(சிக்னல்) புறக்கணிக்கத் தொடங்கும், இதனால் உயிரணுக்களுக்குள் குளுக்கோஸ் நுழைவது கடினமாகிறது. விளைவாக, சர்க்கரையானது ஆற்றலுக்காகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, இரத்த ஓட்டத்தில் கரைகிறது. இது வீக்கம்(risk of inflammation), வகை 2 நீரிழிவு நோய், பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) மற்றும் பிற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் நீண்டகால விளைவுகளே உண்மையாக கவலையளிப்பதாகும்.

கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகளை செரிமானத்தின் போது குளுக்கோஸாக இரத்த ஓட்டத்தில் நுழைகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயருகிறது. ஃபிரக்டோஸ் என்பது சர்க்கரையின் மற்றொரு அங்கமாகும், இது பொதுவாக பழங்களில் காணப்படுகிறது. இது குளுக்கோஸிலிருந்து வித்தியாசமாக வளர்சிதை மாற்றமடையும், அதிகமாக உட்கொள்ளும்போது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பிற வளர்சிதை மாற்ற சிக்கல்களை ஏற்படுகிறது.

Also Read : குக்கீஸ் சாப்பிட்டால் சர்க்கரை நோய், கேன்சர் வரக்கூடும்! எச்சரிக்கும் ஆய்வு ரிப்போர்ட்! Vels Exclusive

கார்போஹைட்ரேட்டுகள் அல்லது சர்க்கரை அதிகம் உள்ள உணவை உட்கொண்ட பிறகு, இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயரும்போது இன்சுலின் ஸ்பைக் ஏற்படுகிறது. அதிகரித்த இரத்த குளுக்கோஸ் அளவிற்கு ஏற்ப கணையம் இன்சுலினை வெளியிடுகிறது. உடல் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு வகை 1 நீரிழிவாகும். வகை 2 நீரிழிவு நோய் என்னவென்றால், உடலானது இன்சுலினை சரியாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதாகும். இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.

சர்க்கரை வகைகள்

நீரிழிவு நோயாளிகள், பல்வேறு வகையான சர்க்கரை மற்றும் உடலில் அவை ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். மக்கள் பெரும்பாலும் சர்க்கரையை வில்லனாகப் பார்க்கும்போது, எல்லா சர்க்கரைகளும் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தாது.

1. வெள்ளை சர்க்கரை

வெள்ளைச் சர்க்கரை அல்லது சுக்ரோஸ், உடனடி ஆற்றலை வழங்கும் ஒரு பொதுவான இனிப்பு. உணவுகள் மற்றும் பானங்களில் இது பிரதானமான இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், அதன் உயர் கிளைசெமிக் குறியீடு(Glycemic Index) இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது சவாலாகவே இருக்கிறது. வெள்ளை சர்க்கரை உடலுக்கு வெற்று கலோரிகளை(Empty Calories) மட்டுமே வழங்குவதுடன், சாதகமான தாதுக்களும் இல்லை என்பதால், அதன் அதிகப்படியான நுகர்வு உடல் பருமன் மற்றும் பல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். டைப் 2 நீரிழிவு நோயை வளர்ப்பதில் உடல் பருமன் முக்கியக் காரணியாக உள்ளது.

2. பழுப்பு சர்க்கரை(Brown Sugar)

பழுப்புச் சர்க்கரையில் வெல்லப்பாகு இருப்பதால், இது கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களை கொண்டுள்ளது. இது சுக்ரோஸின் ஒரு வடிவம் என்பதால், வெள்ளை சர்க்கரையைப் போலவே அதிக அளவு கலோரிகளையும் வழங்குகிறது. எனவே இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் எடை அதிகரிப்பில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளை சர்க்கரையை விட பழுப்பு சர்க்கரை ஆரோக்கியமானது என்ற பொதுவாக நம்பப்படும் நிலையில், நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இருப்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாக இருக்காது.

Getty Image

3. தேன்

தேன் சில ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட இயற்கையான இனிப்பாகும். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளன. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

தேன் ஒரு ஆரோக்கியமான இயற்கை இனிப்பு என்று நம்பினாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொருந்தாது. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை விட, தேன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருந்தாலும், இது வெள்ளை சர்க்கரையை விட மெதுவாக ஜீரணிக்கப்படுவதால், இது அதிக கலோரிகளை கொண்டுள்ளது. இதன் விளைவாக, தேன் நுகர்வு இரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர்த்தும். தேனை சீரான அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.

Also Read : நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைப்பது என்ன?

4. வெல்லம்

வழக்கமான சர்க்கரையிலிருந்து வெல்லம் வேறுபட்டது, ஏனெனில் இது நீண்ட சுக்ரோஸ் சங்கிலிகளிலிருந்து(sucrose chains) தயாரிக்கப்படுகிறது. உடல் இதை மெதுவாக உடைப்பதால் நிலையான வேகத்தில் ஆற்றலை வழங்குகிறது. வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன.

வெல்லத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும் அதேவேளையில், வெள்ளை சர்க்கரையை விட சிறந்த தேர்வாகத் தோன்றினாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானதாக இல்லை. வெல்லத்தில் இன்னும் நிறைய சர்க்கரை உள்ளது, எனவே இது இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள வெல்லத்தை அவ்வப்போது சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.

5. ஸ்டீவியா (Stevia – சீனித்துளசி)

சீனித்துளசி பூஜ்ஜிய கலோரிகளைக் கொண்டிருப்பதாலும், இரத்த சர்க்கரையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததாலும் தனித்து நிற்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சாதகமான மாற்றாக அமைகிறது. சீனித்துளசியானது, வெள்ளைச் சர்க்கரைகளின் குறைபாடுகள் இல்லாமல் இனிப்புச் சுவையை வழங்குகிறது. இருப்பினும் சிலருக்கு இது இரைப்பை குடல் அசவுகரியத்தை கொடுக்கலாம். சில சந்தர்ப்பங்களில், இது குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். Stevia பொடியாகவும், மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

Stevia | Getty Image

6. செயற்கை இனிப்புகள் (அஸ்பார்டேம், சாக்கரின், சுக்ரோலோஸ்)

இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தாமல், உணவுகள் மற்றும் பானங்களை இனிமையாக்க கலோரி இல்லாத செயற்கை இனிப்புகள் கிடைக்கின்றன. இவற்றில் நன்மைகள் இருந்தபோதிலும், நீண்டகால சுகாதார விளைவுகள் குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. சிலருக்கு செரிமான பிரச்சினைகள் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சர்க்கரை கலந்த பானங்களை நீரிழிவு நோய்க்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என சில ஆராய்ச்சிகள் கூறும் அதேநேரம், சுக்ரோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் போன்ற சர்க்கரைகளைப் பற்றிய சான்றுகள் போதுமானதாக இல்லை. ஒட்டுமொத்தமாக, சர்க்கரை நுகர்வை நீரிழிவு அபாயத்துடன் இணைக்கும் நேரடி ஆதாரங்கள் மிகக் குறைவுதான். சர்க்கரையை மிதமாக சேர்ப்பது சீரான உணவின் ஒரு பகுதியாகும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், ஆண்கள் ஒரு நாளைக்கு ஒன்பது டீஸ்பூனுக்கு(36 கிராம்) மிகாமல் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம் எனவும், பெண்கள் ஆறு டீஸ்பூனுக்கும்(25 கிராம்) குறைவாகவே உண்ண வேண்டும் என்றும் கூறுகிறது.

Also Read : சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?

நீரிழிவு நோய் அல்லது குறைபாடு என்பது சர்க்கரை நுகர்வால் மட்டுமே ஏற்படாது என்று இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். இன்சுலின் எதிர்ப்பு, மரபணு முன்கணிப்புகள்(Genetic Predispositions) மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் உள்ளிட்டவைகளும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணியாகிறது. சர்க்கரையை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் உடலுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், தொடர்ந்து அதிக சர்க்கரை உட்கொள்வதால் நிச்சயமாக நீண்டகால விளைவுகள் ஏற்படும். இவை நீரிழிவு நோயின் அபாயத்தைத் தாண்டி, இதய நோய், கல்லீரலில் கொழுப்பு, சிறுநீரக பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தக்கூடும்.

உணவு மாற்றங்கள், உடல் செயல்பாடு, மருந்துகள் மற்றும் இன்சுலின் சிகிச்சை மூலம் நீரிழிவு நோயை நிர்வகிக்கலாம். நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சீரான உணவை உண்பதன் மூலம் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்கவும், இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைக் குறைக்கவும் உதவும்.

Disclaimer: The purpose of this article is just to disperse knowledge and raise awareness. It does not intend to replace medical advice from professionals.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry