காலை காபியுடன் இனிப்பான ஏதாவது ஒன்றைச் சாப்பிட வேண்டுமா? மதியம் அல்லது இரவு உணவிற்குப் பிறகு ஏதாவது கொறிக்க வேண்டும் என தோன்றுகிறதா? குக்கீ அதைச் செய்கிறது. ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் குக்கீஸ்களை சாப்பிடுவது கூட மிகவும் எளிதானதுதான்.
இதற்கு மேல் சுத்திகரிக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, பாம் ஆயில் எனப்படும் பனங்கொட்டையில் எடுக்கப்பட்ட எண்ணெயில் செய்த விதவிதமான, ‘குக்கீஸ், பிஸ்கட், கேக் வகைகள்தான் சூப்பர் மார்க்கெட்டில் அதிக அளவில் விற்பனையாகிறது. அனைத்து வகை சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகளில் கூட விதவிதமான குக்கீஸ் விற்பனைக்கு வந்துவிட்டன.
குக்கீகள் என்பது பேக்கரி பிஸ்கட் வகைகளாகும், அவை பல்வேறு சுவைகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான குக்கீகள் வறண்ட, அடர்த்தியான, மொறுமொறுப்பான மற்றும் அடர்த்தியானதாக இருக்கும். குக்கீகளை உண்ணும் பழக்கம் உடலுக்கு என்ன தீங்கை செய்துவிடப்போகிறது, அது Bake செய்யப்பட்டதுதானே என்று நீங்கள் நினைக்கலாம்.
குக்கீகளை அதிகம் சாப்பிடுபவர் என்றால், அதில், அதிக அளவு பிரக்டோஸ் கார்ன் சிரப் உள்ளதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆய்வு ஒன்றில், உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப்பை சாப்பிட்ட எலிகள், டேபிள் சுகர் சாப்பிட்டவர்களை விட அதிக எடையைப் பெற்றன. உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப்பை, டேபிள் சுகர் இரண்டும் ஒரே அளவு கலோரிகளை கொண்டிருந்தன.
நீங்கள் அதிகமாக குக்கீகளை சாப்பிடுவதற்கான காரணம் என்னவென்றால், உங்கள் மூளை குக்கீகளுக்காக ஏங்குகிறது. அதாவது நீங்கள் அடிமையாகிறீர்கள். சர்க்கரையில் செய்யப்பட்ட குக்கீகளை நிறைய சாப்பிடுவதால், அதிகப்படியான குளுக்கோஸை ஈடுசெய்ய கணையம் இன்சுலின் வெளியிடும். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் மற்றும் உங்கள் இன்சுலின் அளவை சீர்குலைக்கும்.
Also Read : செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல்! சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!
குக்கீகளில் பெரும்பாலும் ஒரு கிராமுக்கும் குறைவான நார்ச்சத்தே இருக்கும். இது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் வயிற்றை கோளாறின்றி வைத்திருக்கும், தேவையற்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடும் எண்ணம் வராது. மட்டுமல்லாமல், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, இதய நோய் மற்றும் புற்றுநோயை உருவாகும் அபாயத்தை எதிர்த்துப் போராட உதவும். எனவே நார்ச்சத்து இல்லாத குக்கீகளை எடுத்துக்கொள்ளும்போது, பசியுடன் உங்களை மீண்டும் மீண்டும் சமையலறைக்கே அழைத்துச் செல்லும்.
ஒவ்வொருநாளும் குக்கீ போன்ற சர்க்கரை உணவுகளை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் மட்டுமல்ல, டைப் 2 நீரிழிவு நோயும் வரலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனின் ஆய்வானது, “குக்கீ போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவிலிருந்து 25% அல்லது அதற்கு மேற்பட்ட கலோரிகளை நீங்கள் பெறுவீர்கள். இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான நிலை உருவாகிறது” என எச்சரிக்கிறது. குக்கீகளை தொடர்ந்து சாப்பிடுவதால், உங்கள் தோலில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சேதமடையலாம். இது தோலில் சுருக்கங்கள் வர வழிவகுக்கும்.
Recommended Video
காலை உணவை தவிர்ப்பது சரியா?Is it okay to skip breakfast?|Sadhu Janakiraman|Vels Media
தினசரி தவறாமல் குக்கீஸ் சாப்பிடும் இரண்டு லட்சம் பேரை சராசரியாக 58 வயதிற்குள், தேர்வு செய்து, 10 ஆண்டுகள் கண்காணித்ததில், 15 ஆயிரத்து 921 பேருக்கு ‘கேன்சர்’ பாதிப்பு வந்துள்ளதும், 4,009 பேர் கேன்சரால் இறந்ததும் தி லேன்சட் ஆய்வில் தெரிய வந்துள்ளது. குக்கீஸ், பிஸ்கட், கேக் சாப்பிடுவது, பலவிதமான கேன்சர் வரும் வாய்ப்பை, குறிப்பாக மூளை, கருக்குழாய் கேன்சர் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மார்பக கேன்சரால் இறக்கும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக உள்ளது.
குக்கீகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள், சுருக்கமாக:
குக்கீகளில் அதிக கலோரி உள்ளதால், உங்கள் உடல் எடை அதிகரித்து பருமனாக மாற்றும்.
குக்கீகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவு அதன் உயர் கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும்.
உப்பு சேர்க்கப்பட்ட குக்கீகள் உங்கள் இரத்த அழுத்த அளவை உயர்த்தும் திறன் கொண்டவை.
குக்கீகளின் வெண்ணெய் உள்ளடக்கம் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம்.
குக்கீகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மாவு, மிக எளிதாக பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகிறது மற்றும் அத்தகைய பாதிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் குக்கீகள் ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு விஷத்தை ஏற்படுத்தலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry