ஊழலும், வாரிசு அரசியலும் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்! பிரதமர் மோடி சுதந்திர தின உரை!

0
59

நாட்டின் 76-வது சுதந்திரன தினத்தையொட்டி பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்குச் சென்ற அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.

முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்ற பிரதமர் மோடி, சரியாக 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து, 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர் சாரே ஜஹான் சே அச்சா பாடல் முழங்க வீரர்கள் பரேட் நடத்தினர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

அப்போது, “நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். 75 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிலேயே உருவான துப்பாக்கியிலிருந்து இந்திய தோட்டா முழங்கியதைக் கேட்டபோது பெருமையாக இருந்தது. இதற்காக இந்திய ராணுவத்திற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது புதிய திசையில், புதிய இலக்குகளுடன் பயணப்பட வேண்டிய தருணம். நம் நாட்டின் விடுதலைக்கான போராட்டம் நடந்தபோது ஒரே ஒரு நாள் கூட விடுதலைப் போராட்ட வீரர்கள் கொடுமையை அனுபவிக்காமல் இல்லை. இன்று தான் அவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டிய நாள்.

நமது தேசியக் கொடியின் பெருமை நமது தேசத்தைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிர்கிறது. மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், எஸ்.பி. முகர்ஜி, சாஸ்திரி, அம்பேத்கர், லோகியோ, ராஜாஜி, பகத்சிங், ராஜ்குரு, ஜெய்பிரகாஷ் நாராயணன், மங்கள் பாண்டே, நேதாஜி, ராணி வேலுநாச்சியார், சுப்பிரமணிய பாரதியார், பழங்குடியின விடுதலை வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் நாம் நினைவு கூர்வோம். இவர்களை சில காலம் தேசம் மறந்துவிட்டது. நாம் இப்போது அவர்களுக்கான உரிய மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

சுதந்திரத்திற்காக அஹிம்சை, ஆயுதம், அரசியல் சாசனம், கொண்டு போராடினார்கள். ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர்களை வெளியேற்றினால் பொருளாதாரம் பின்னோக்கி சென்று விடும் என்று கூறினார்கள். இன்று இந்தியா வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது.

ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான். ஊழலை ஒழிக்காமல், ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது. நாட்டில் ஊழலை ஒழிக்க மக்கள் அனைவரும் எனக்கு துணையாக இருக்க வேண்டும். இந்த வேளையில் நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு சவால் வேண்டியவர்களுக்கு செய்யப்படும் சலுகை.

குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமை. இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும்.

Also Read : அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு! தியாகிகள் ஓய்வுதியமும் அதிகரிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பலம். பன்முகத்தன்மை, பல மொழிகள் கொண்டது இந்தியா. பல்வேறு சவால்களையும் எதிர் கொண்டு இந்தியா எவ்வித தடையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனநயாகத்தின் தாய் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.

75 ஆண்டுகளாக நாம் பல்வேறு ஏற்ற , இறக்கங்களை கண்டு வருகிறோம். மக்களுக்கு அதிகாரம் வழங்கும் பணியை நான் செய்து வருகிறேன். கடைசி மனிதனுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளது. நாட்டில் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

Also Read : சுகர் பேஷன்டுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! இதை மட்டும் செய்ங்க, உங்க வாழ்வே சிறப்புதான்!

வரும் 100 வது ஆண்டில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக மாற வேண்டும். 2047க்குள் சுதந்திர வீரர்களின் கனவை நிறைவேற்றுவோம். அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்தை உடைத்தெறிவோம். வரும் 25 ஆண்டுகளில் நாம் ஒரு நொடியை வீணாக்க முடியாது. ஒற்றுமை , ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்போம். இந்தியாவை பலர் சந்தேகிக்கின்றனர். இந்த நிலத்தின் சிறப்பு அவர்களுக்கு தெரியாது. இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் நமது பெண் சக்திக்கு நாம் துணையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதுதான் இந்திய வளர்ச்சிக்கான தூண். நம் பேச்சிலும், செயலிலும் பெண்களின் மாண்பைக் குறைக்கும் சிறு வெளிப்பாடு கூட இருக்கக் கூடாது.

Also Read : போதைப்பொருளால் சீரழியும் மாணவர்கள்! கஞ்சா வேட்டையைத் தடுக்கும் அதிகார வர்க்கம்!ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

வரும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும், வரும் 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானது. 100 வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக உலகில் வளர்ந்த நாடாக இருக்கும்.

இறக்குமதி பொம்மைகளை நம் நாட்டின் குழந்தைகள் தவிர்க்கும்போது நான் அவர்களுக்கு மரியாதையை உரித்தாக்குகிறேன். 5 வயது குழந்தை ஒன்று வெளிநாட்டு பொம்மை வேண்டாம் என்று கூறினால் அதன் நாடி நரம்புகளில் தேசப்பற்று பாய்கிறது என்று அர்த்தம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry