முருகன் பாடலுக்கு ஆபாச குத்து நடனம்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிக்டாக் பிரபலம் திருச்சி சாதனா!

0
212

ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள் என சர்ச்சையில் சிக்கி போலீசாரின் எச்சரிக்கைக்கு ஆளான டிக்டாக் பிரபலம் ரோஸ் டீசர்ட் திருச்சி சாதனா, தற்போது முருகன் பாடலுக்கு ஆபாச நடனம் ஆடி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

முருகப்பெருமானின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலின் ரீமிக்சுக்கு, ஆபாச அசைவுகளுடன் அவர் நடனமாடி இருப்பது பக்தர்களிடையே குறிப்பாக இந்து சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டம், குளித்தலை நச்சலூர் பகுதியைச் சார்ந்தவர் சாதனா. இவர் திருச்சி சாதனா என்கின்ற பெயரில் டிக்டாக் மூலம் அறிமுகமானார். பின்னர் யூடியூப் பக்கத்தில் இரட்டை அரத்தங்களை குறிக்கும் வீடியோக்களையும் பதிவேற்றி வந்துள்ளார். இதில் பல வீடியோக்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

Also Read : சுகர் பேஷன்டுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! இதை மட்டும் செய்ங்க, உங்க வாழ்வே சிறப்புதான்!

இதுகுறித்து நச்சலூர் கிராம மக்கள், கடந்த மே மாதம் முதல் வாரம் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதில், ‘கிராமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஆபாச வீடியோக்களை வெளியிடும் சாதனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர்கள் கோரியிருந்தனர்.

திருச்சி சாதனா

இதையடுத்து, மே 8 ம் தேதி, இனி ஆபாசமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று குளித்தலை காவல் நிலையத்தில் எழுதிக்கொடுத்து விட்டு அதனை வீடியோவாகவும் அவர் பதிவிட்டார். சில நாட்கள் அமைதியாக இருந்த சாதனா தற்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் முகம் சுளிக்க வைக்கும் செயலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். முருகன் பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியுள்ள ரோஸ் டீசர்ட் சாதனாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry