ஞாபக சக்திக்கு மட்டுமல்ல, மாதவிலக்க பிரச்னையையும் சரி செய்யும் வல்லாரை

0
61

வல்லாரைக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ளன.

வல்லாரையை உணவாகக் கொண்டால், வாயு சம்பந்தமான நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வல்லாரை இலையில் இருந்து பால் எடுத்து தினமும் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் குஷ்ட நோய்கள், தோல் நோய்கள், ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.

வல்லாரை சாறு, கீழாநெல்லி இலைச்சாறு சம் அலவு எடுத்து கொள்ளவேண்டும். பசும்பால் 100 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலைகூட குணமாகும்.

வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊறவைத்து எடுத்து பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக்  கோளாறுகள் சரியாகும்.