ஓலா கேப்ஸ் போன்ற சில நிறுவனங்கள் கூகுள் மேப்ஸ் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு உள்நாட்டு சேவைகளைப் பயன்படுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, கூகுள் நிர்வாகம் கூகுள் மேப்ஸ்-க்கான ப்ரோகிராமிங் இன்டர்பேஸ் கட்டணத்தை 70% வரையில் குறைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியான சில நாட்களில், இந்த வாரம் முதல் 40 இந்திய நகரங்களில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் மேப்ஸில் ‘Flyover Callout’ அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ஆண்ட்ராய்டு பயனர்களால் அதிகம் கோரப்பட்ட அம்சம் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சம் iOS பயனர்களுக்கு பின்னர் கிடைக்கும்.
Flyover Callout சேவை என்றால் என்ன?
பொதுவாகக் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வாகனம் ஓட்டும் போது, ஃப்ளைஓவர்-ல் செல்ல வேண்டுமா, கீழே செல்ல வேண்டுமா என்பது நமக்குத் தெரியாது. ஒரு சில நொடி காத்திருந்து சுதாரித்துக்கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையைக் களையும் வண்ணம் ஃப்ளைஓவர் குறித்து முன்கூட்டியே அறிவித்து சிறப்பாக வழிகாட்டும் சேவை தான் இந்த Flyover Callout சேவை.
குறுகிய சாலை சேவை:
இதேபோல் கூகுள் மேப்ஸ் மற்றொரு சேவையும் அறிமுகப்படுத்த உள்ளது, அதாவது நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் குறுகிய சாலைகளைத் தவிர்க்க உதவும் ‘குறுகிய சாலைகள்’ (‘narrow roads’) அம்சத்தையும் அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் மேப்ஸ் இந்தியாவின் பொது மேலாளர் லலிதா ரமணி தெரிவித்துள்ளார்.
Also Read : பற்களை எந்த பேஸ்ட்டில், எவ்வளவு நேரம், எப்படி துலக்க வேண்டும்? பல் துலக்கும் தெளிவான வழிமுறைகள்!
மேலும், ஃப்ளைஓவர்-ல் செல்ல வேண்டுமா அல்லது, பக்கத்தில் இருக்கும் சர்வீஸ் சாலையில் செல்ல வேண்டுமா என்று எத்தனை முறை யோசித்திருக்கிறோம்? ஃப்ளைஓவர் வழிகாட்டுதல் சேவை கூகுள் பயனர்கள் நீண்ட காலமாகக் கோரப்பட்ட அம்சமாகும். உங்கள் பயணத்தில் வரும் ஃப்ளைஓவர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் வகையில் ‘Flyover Callout’ சேவையை இணைத்து வருகிறோம். இந்த அப்டேட்டுகள் இந்த வாரம் முதல் ஆண்ட்ராய்டு மேப்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் கிடைக்கும். iOS மற்றும் கார்ப்ளேயில் பின்னர் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
புதிய வழிகாட்டுதல் சேவை:
இதோடு இந்தியாவில் உள்ள கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வழிகாட்டுதல் திறனையும் (new routing capability) நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இது 8 இந்திய நகரங்களில் நான்கு சக்கர வாகன பயணங்களில் குறுகிய சாலைகளில் செல்வதைக் குறைக்கும் என்று ரமணி குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் மேப்ஸ்-ன் AI:
மேலும் இந்திய சாலைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு AI (செயற்கை நுண்ணறிவு) மாடலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது சாலை அகலத்தை மதிப்பிடுகிறது. செயற்கைக்கோள் படங்களை எடுத்து அதை ஸ்ட்ரீட் வியூவ் படத்துடன் பொருத்தி சாலையின் அகலத்தையும் இணைக்கிறது. இதன் மூலம் சாலை வகை, கட்டிடங்களுக்கு இடையே உள்ள தூரம், மரங்கள், தூண்கள் மற்றும் மழை போன்ற தகவல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது எனவும் லலிதா ரமணி தெரிவித்துள்ளார்.
மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்:
இந்தியாவில் முன்னணி மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலைய நிறுவனங்கள் மற்றும் டேட்டா அக்ரிகேட்டர்களான எலக்ட்ரிக் பே, ஏதர், கசம் மற்றும் ஸ்டேடிக் ஆகியவற்றுடன் இணைந்து நாட்டில் இருக்கும் 8,000 சார்ஜிங் நிலையங்கள் பற்றிய தகவல்களைக் கூகுள் மேப்ஸில் சேர்க்க உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry