கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதார்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் கூகுள் நிறுவனமானது, கூகுள் டிவி ஸ்ட்ரீமர் (Google TV Streamer) பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் தொடங்கி 800+ லைவ் டிவி சேனல்கள் வரையில் கொடுப்பது மட்டுமல்லாமல், 4K ரெசல்யூஷன், டால்பி விஷன், கேமரா கன்ட்ரோல், வாய்ஸ் ரிமோட் என ஃபீச்சர்களில் கூகுள் மிரளவிட்டுள்ளது.
Google TV Streamer மூலம் 4K HDR ரெசல்யூஷனில் வீடியோக்களை பார்க்க முடியும். டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) போன்ற அல்ட்ரா பிரீமியம் வீடியோ ஃபீச்சர்களையும் இது கொண்டுள்ளது. ஆடியோவிலும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் உள்ளது.
Also Read : நீங்க Hard Worker or Smart Worker? வெற்றிக்கான சிம்பிள் டிப்ஸ்! இனி எல்லாமே சக்ஸஸ்தான்!
மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. ஆகவே, ஓடிடி, டிவி சேனல்கள் என்று எதையும் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ மற்றும் வீடியோ தரத்தில் பார்க்கலாம். இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமரில் 4 GB RAM + 32 GB மெமரி வருகிறது. வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டியையும் கொண்டிருக்கிறது.
அதேபோல எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி-சி (USB-C) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டியும் வருகிறது. வாய்ஸ் ரிமோட் (Voice Remote), ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS), ஸ்மார்ட் ஹோம் கனெக்டிவிட்டி (Smart Home Connectivity) போன்ற அம்சங்களுடன் வருகிறது கூகுள் டிவி ஸ்ட்ரீமர். ஆகவே, ஸ்மார்ட் கேமரா, லைட் மற்றும் டெப்ரேச்சர் டிவைஸ் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். அதேபோல மொபைல், ஸ்பீக்கர் காஸ்ட் செய்து கொள்ளலாம்.
ஆம்பியன்ட் மோட் (Ambient Mode), ஹோம் பேனல் (Home Panel), காஸ்டிங் & குரூபிங் (Casting & Grouping) மற்றும் கூகுள் போட்டோஸை (Google Photos) இது சப்போர்ட் செய்யும். இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமரில் நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஆப்பிள் டிவி (Apple TV), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல், 800+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஏஐ ஃபீச்சர்களும் வருகின்றன. ஆகவே, ஓடிடி ஆப்கள், டிவி சேனல்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் ஃபீச்சர்களையும் இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் பேக் செய்துள்ளது. ஏற்கனவே, ஓடிடி வருகைக்கு பிறகு கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எல்லோரும் ஆப் மூலமே வீடியோக்களை பார்க்க தொடங்கிவிட்டனர்.
இப்போது, கூகுள் டிவி ஸ்ட்ரீமரின் வருகை கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ்களுக்கு மேலுமொரு அடியாக விழுந்துவிட்டது. இருப்பினும், இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் அல்ட்ரா பிரீமியம் ஃபீச்சர்களை கொண்டிருப்பதால், சற்று விலையும் அதிகமாகவே இருக்கிறது. அதாவது, ரூ.8,390ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹேசல் (Hazel) மற்றும் போர்சிலைன் (Porcelain) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
ஆகஸ்ட் 6ஆம் தேதியில் இருந்து Google TV Streamer ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கூகுள் ஸ்டோர்களில் (Google Store) ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் நாட்களில் மற்ற ஈ-காமர்ஸ் தளங்களிலும் ஆர்டருக்கு கிடைக்கலாம். பிரீமியம் கஸ்டமர்களுக்கு இது பக்காவான தேர்வாக இருக்கும். அதேநேரத்தில் பழைய டிவைஸ்களுக்கு இது கட்டாயம் மாற்றாக இருக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry