ஒரு கோடி ரூபாயை திரும்பக் கொடுத்தாரா, இல்லையா? மிஸ்கின் பற்றி AVM குடும்ப வாரிசு பரபரப்பு பேட்டி!

0
89

சைக்கோ படம் தொடர்பாக இயக்குனர் மிஸ்கினுடன் நிலவிவந்த பிரச்சனை குறித்து ஏவிஎம் குடும்ப அறிமுக நடிகர் ஆரியன் ஷாம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சைக்கோ படத்துக்காக தன்னிடம் முன்பணமாக வாங்கிய ஒரு கோடி ரூபாயை மிஸ்கின் திருப்பி கொடுத்து விட்டதாக கூறினார். எனவே மிஷ்கின் மீது தான் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்று விட்டதாகவும் ஆரியன் ஷாம் தெரிவித்தார்.

நடிகர் ஆர்யா ஷாம் ஏவிஎம் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தற்போது அந்த நாள் எனும் படத்தில் நடித்துள்ளார். கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை விவீ என்பவர் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு சென்சார் போர்டுடன் பல போராட்டங்கள் நடத்தி ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாக ஆரியன் ஷாம் தெரிவித்துள்ளார். எனவே இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் ரிலீஸ் செய்யவில்லை என ஆரியன் விளக்கம் அளித்தார்.

கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry