திருவண்ணாமலை செங்கம் சாலையில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இரு வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 25-ந் தேதி மாலையில் பள்ளி முடிந்த பின்பு இரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு மோதலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
திருவண்ணாமலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் மோதல். இது இரு சமூக மாணவர்கள் இடையேயான மோதலாகவே தெரிய வருகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. @EPSTamilNadu @SeemanOfficial @annamalai_k @Veera284 @sreeramjvc @raaga31280 @Indumakalktchi @Pandidurai274 pic.twitter.com/sjgioTPQPT
— VELS MEDIA (@VelsMedia) July 27, 2022
இந்த நிலையில் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை அழைத்து காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் நேற்று கவுன்சிலிங் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் ராஜீவ் காந்தி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோருக்கு அறிவுரையும், ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
“பள்ளி வகுப்பறையில் எந்தவித பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து தகராறில் ஈடுபடுவது தவறு. படிக்கும் காலத்தில் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகளை அவர்களது பெற்றோரும் கவனிக்க வேண்டும்” என காவல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry