விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் மாதுளை! சருமப் புற்றுநோயை தடுத்து, இதயத்தையும் ஆரோக்கியமாக்கும் மாதுளை தோல்!

0
547

மாதுளை பழங்களுக்குசைனீஸ் ஆப்பிள்என்ற செல்லப் பெயரும் உண்டு. இதில் எண்ணற்ற வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்திருப்பதால் சீரான இரத்த ஓட்டத்தை தரும்.விந்தணுக்களின் உற்பத்தியையும் இது அதிகரிக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கவும் மாதுளை உதவுகிறது.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதில் மாதுளம் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரத்ததில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது. எனவேதான் தினமும் மாதுளம் பழம் சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மாதுளம் பழம் மட்டுமின்றி அதன் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.

மாதுளை தோலை காய வைத்து தூளாக்கி, அதை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில், பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மாதுளை தோல் உதவும். எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அதன் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் மாதுளை தோல் சிறந்தது. ஏனெனில் இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கும் இது உதவியாக இருக்கும்மாதுளை தோல் சருமத்தை இளமையாகவும்,பொலிவுடனும் வைக்க உதவுகிறது, முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தவிர்க்கிறது

இருமல் மற்றும் தொண்டை புண் இருப்பவர்கள், மாதுளை தோலை காய வைத்து தூளாக அரைத்து தண்ணீரில் கலந்து குடித்துவந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். புற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு மாதுளை தோல்கள் பயனுள்ளதாக இருக்கும். புற்றுநோய் செல்களை கண்டறிந்து போராடும் பண்புகள் மாதுளை சாற்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இது சருமப் புற்றுநோயைத் தவிர்க்க உதவுகிறது. மாதுளை தோல்களில் எல்.டி.எல் கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைத் தவிர்க்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் ஏராளமாக உள்ளன. இதனால், மாதுளை தோல்கள்  இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மாதுளம் பழத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஃபைபர் போலேட் , விட்டமின் சி , விட்டமின் கே, பொட்டாசியம் முதலிய சத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இந்தப் பழங்கள் ஏற்றது. மாதுளம் பழத்தை உட்கொள்வதால் நினைவாற்றலும், கற்கும் திறனும் அதிகரிக்கிறது. எனவே, குழந்தைகளுக்குப் போதிய அளவு மாதுளம் பழங்களைச் சாப்பிடக் கொடுப்பது நல்லது.

மாதுளம் பழங்கள் குடலில் ஏற்பட்ட வீக்கங்களைக் குணப்படுத்த உதவுகின்றது. இதனால் செரிமானம் இலகுவாகின்றது. மாதுளம் பழங்களை தொடர்ச்சியாக உட்கொள்வதால் பெருங்குடல் புண் மற்றும் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் ஆறத்தொடங்கி நல்ல பலன் ஏற்படும். மாதுளை பழம் உடலின் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றது. உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகள் உள்ளவர்கள் மாதுளம் பழங்களை உண்பதால் நல்ல பலனை அடையலாம்.

மாதுளை பழங்கள் தொடர்ந்து உட்கொள்வதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. அதனால் பெண்கள் தங்கள் உணவில் மாதுளை பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது. மாதுளை முத்துக்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கப் பெரிதும் உதவுகிறது. ரத்த சோகை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மாதுளை உதவும்.

ஆண்களின் பிறப்புறுப்புகளில் ஏற்பட கூடிய இரத்த ஓட்டம் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்த மாதுளை சிறந்த மருந்தாக உள்ளது. இதனால் தாம்பத்தியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். அத்துடன் விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விரைவிலே கருத்தரிக்க மாதுளை உதவும்.

பாலுணர்வை தூண்ட மாதுளையை சாப்பிட்டு வந்தாலே போதும். இதில் உள்ள பலவித சத்துக்கள் சிறப்பான முறையில் செயல்பட உதவும். உடலுறவு வைத்து கொள்ளும் நாட்களில் ஆணும் பெண்ணும் மாதுளையை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சிறப்பான தாம்பத்தியம் இருவருக்குள்ளும் அரங்கேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மிக விரைவிலே கருத்தரிக்க உதவும் எனவும் கூறப்படுகிறது.

கர்ப்பகால நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு ஆளான கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை உட்கொள்வது நல்லதல்ல. இதில் நிறைந்துள்ள இனிப்புச் சத்து நீரிழிவுசார்ந்த நோயை இன்னும் மோசமாக்கும். ரத்த அழுத்தம் குறைவாக உள்ள நபர்கள் மாதுளம் பழங்களைச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் மாதுளை பழங்கள் உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை. அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்போர் மாதுளையைத் தொடவே கூடாது. மாதுளம் பழம் இரத்த அழுத்த அளவுகளை நேரடியாகத் தாக்கும் தன்மை கொண்டன. ஆக அறுவை சிகிச்சைக்குக் குறைந்தது இரண்டு வாரத்துக்கு முன்னபே, மாதுளையை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry