கோவிட் பரவலுக்கு முன்பே தடுப்பூசி கண்டுபிடித்த சீனா! வூஹான் ஆய்வகத்தில் வைரஸ் உருவாக்கப்பட்டது அம்பலம்!

0
18

கோவிட்-19 வைரஸின் உருவாக்கம் குறித்து இப்போது வெளியாகியுள்ள ரகசியங்கள் அதிர்ச்சி தருவதாய் உள்ளது. வைரஸ் பரவலுக்கு முன்பாகவே சீனா தடுப்பூசி கண்டுபிடித்தது தற்போது அம்பலமாகியுள்ளது

இந்தியர் ஒருவர் தலைமையில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் ‘DRASTIC’ (Decentralized Radical Autonomous Search Team Investigating COVID-19) என்ற பெயரில் ஒன்றிணைந்து, கோவிட்-19 வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில்தான் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர். எதிர்காலத்தில் மனிதர்களை அச்சுறுத்தக்கூடிய நோய்களுக்கு மருந்து கண்டறியவே  ஆராய்ச்சி செய்ததாக வூஹான் ஆய்வுக்கூடம் சொன்னாலும், உயிரி ஆயுதமாக வைரஸ்களை உருமாற்றவே ஆராய்ச்சி நடைபெற்றதாக ‘DRASTIC’ குழு கூறியுள்ளது.

2019 டிசம்பரில்தான் SARS-CoV-2 வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டதாக சீனா வெளிப்படையாகச் சொன்னது. ஆனால், நவம்பர் மாதமே வூஹான் ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் மூன்று பேர் விநோதமான நோயால் பாதிக்கப்பட்டனர். இதுபற்றிய தகவலை சீனா மறைத்த நிலையில், அதுதான் கொரோனாவின் முதல் தாக்குதல் என்று உலக அறிவியலாளர்கள் தற்போது குற்றஞ்சாட்டுகிறார்கள்.

பிரிட்டிஷ் பேராசிரியர் ஆங்கஸ் டேல்க்ளெஷ், நார்வே விஞ்ஞானி பெர்ஜர் சோரன்சன் ஆகியோர் இணைந்து செய்த கொரோனா ஆய்வு, அதிர வைக்கும் பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது. இயற்கையான ஒரு வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவும். ஆனால், அந்த வைரஸ் உருமாறி வீரியம் இழக்கும். கொரோனா வைரஸோ வீரியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கும் காரணம், சீனா செய்த இன்னொரு வேலைதான். ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்து மனிதர்களுக்குப் பரவிய வைரஸை மீண்டும் எடுத்து, ரெட்ரோ இன்ஜினீயரிங் முறையில் அதை இயற்கையானதுபோல மாற்றியுள்ளனர். அதுதான் உலகம் முழுக்கப் பரவியிருக்கிறது என்று சொல்கிறார் சோரன்சன்.

இந்த நிலையில், கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு பல மாதங்கள் முன்னதாகவே, சீனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை பேராசிரியரும், வைரலாஜி துறைத் தலைவருமான டாக்டர் ஜேக்கப் ஜான் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில், 2019 டிசம்பரில் இருந்து இதுவரையில் 91,300 பேர் மட்டுமே கோவிட்-19 வைரஸால், அதாவது SARS-CoV-2 ஆல் பாதிக்கப்பட்டதாகவும், 4,636 பேர் மட்டுமே இறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வூஹான் ஆய்வகத்தில் கோவிட்-19 வைரஸ் உருவாக்கப்பட்ட உடனேயே, அது கசிந்தால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, சீனா அரசு தடுப்பூசியை கண்டுபிடித்தது என்று கூறும் அவர், இதன் மூலமே வைரஸ் பரவலை சீனா கட்டுப்படுத்தியுள்ளது என்கிறார். தொற்று பரவ ஆரம்பித்த 2 மாதங்களுக்குப் பிறகு, அதாவது பிப்ரவரி 2020-க்குள் SARS-CoV-2 தடுப்பூசிக்கான உரிமத்துக்கு இளம் விஞ்ஞானி ஒருவர் சீன அரசிடம் விண்ணபித்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இரண்டே மாதங்களில் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடித்து அது முழுமையாக வேலை செய்வது சாத்தியமில்லை என்பதால், ஒரு வருடம் முன்னதாகவே தடுப்பூசியை தயாரித்திருக்க வேண்டும் என்று டாக்டர் ஜான் கூறுகிறார். இதன்மூலம், சீனா கூறியபடி 2019 டிசம்பரில் கோவிட்-19 வைரஸ் உருவாகவில்லை, குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே SARS-CoV-2ஐ சீனா உருவாக்கியிருக்கக்கூடும். இந்த வைரஸ் மூலம் உயிரிப் போரை சீனா தொடங்கியிருப்பது உறுதியாகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry