
உணவுடன் காபி, டீ அருந்துவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க பலவிதமான ஊட்டச்சத்துகள் தேவை. நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.
Also Read : காலையில் டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? அச்சுறுத்தும் உண்மை..!
காபியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனக் கலவைகள் உள்ளன. அதில் கேஃபின்(caffeine), பாலிஃபெனால்(Polyphenol), டானின் (tannins) போன்றவை, நீங்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். பெரும்பாலானோருக்கு இதனால் ஏற்படும் விளைவுகள் குறைவாகவே இருக்கும்.
காபி அருந்துவதால் அனைத்து விதமான சத்துகளும் உறிஞ்சப்படுவது முற்றிலுமாக ‘தடுக்கப்படாது’, மாறாக குறைவான சத்துகள் உறிஞ்சப்படலாம்,” என்கிறார், லண்டன் காலேஜ் பல்கலைக்கழகத்தில் (University College London) ஊட்டச்சத்து அறிவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரும், தி ஹெல்த் சயின்சஸ் அகாடமியின் முதன்மை அறிவியல் கல்வியாளருமான அலெக்ஸ் ருவானி.

காபி எவ்வளவு ஸ்டிராங்காக இருக்கிறது என்பதைப் பொறுத்து இதனுடைய தாக்கம் இருக்கும் என்கிறார் ருவானி. எவ்வளவு ஊட்டச்சத்துகள் நுகரப்படுகின்றன, வயது, வளர்சிதை மாற்றம், ஆரோக்கிய நிலை, மரபியல் ஆகிய காரணிகளைப் பொறுத்தும் இது மாறுபடும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, பி வைட்டமின்கள் போன்றவையும் அடங்கும் என்கிறார் அவர்.
மேலும், காஃபினேட்டட் பானங்களை குடிப்பதால் சிலருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம், சிலருக்கு அவ்வாறு ஏற்படுவதில்லை. இதய பாதுகாப்பை பொறுத்தவரை காஃபின் சிலருக்கு நன்மை பயக்கும், சிலருக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்
உங்களுக்குப் போதுமான அளவில் ஊட்டச்சத்து கிடைக்கிறது என்றால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் ஏற்கெனவே ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளவர்கள் அதிகமாக காபி குடிக்கும்போது, ஊட்டச்சத்து மேலும் குறைவதற்கு அது வழிவகுக்கும் என்கிறார் லினஸ் பௌலிங் நிறுவனத்தின் இயக்குநரும், ஓரேகான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்லூரியின் பேராசிரியருமான எமிலி ஹோ.

இரும்புச்சத்து
இரும்புச்சத்து குறைவாக உறிஞ்சப்படுவதில் காபிக்கு உள்ள தொடர்பு குறித்து 1980களில் இருந்தே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. உணவுடன் காபி அருந்தும்போது அதிலுள்ள பாலிஃபெனால், செரிமான மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட தாதுக்களுடன் இணைந்துகொள்ளும் என்கிறார் ஹோ. இப்படி இணையும் நடைமுறையின்போதும், நமது உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதைக் கடினப்படுத்தும் என அவர் விளக்குகிறார். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் ‘நான்-ஹீம் அயர்ன்’ (Non-Heme Iron) வகை இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்குக் கடினமானதாக இருக்கும்.
காபியில் உள்ள பாலிஃபெனால்கள், குறிப்பாக குளோரோஜெனிக் அமிலம் இவ்வகை இரும்புச்சத்துடன் இணைந்து உடல் கிரகித்துக் கொள்வதற்குப் பதிலாக கழிவாக வெளியேற்றிவிடும். எனவே, இரும்புச்சத்து உள்ள உணவுகளை உண்டவுடனேயே காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்து கொண்ட உணவுகளை உண்பதற்குக் ஒரு மணிநேரம் முன்போ அல்லது உண்டு முடித்து இரண்டு மணிநேரங்கள் கழித்தோ காபி அருந்தலாம்.
Also Read : டீ, காபி குடிப்பதற்கு முன் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்! ஏன் தெரியுமா?
கால்சியம்
சிறுநீரகங்கள் நம் ரத்தத்தில் இருந்து கழிவுகளையும், அதீத நீரை சிறுநீராகவும் வெளியேற்றுகிறது. மேலும், நமது உடலில் ரசாயனங்கள் (சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை) சமநிலையுடன் இருக்க சிறுநீரகங்கள் உதவுகிறது. கால்சியம், ஹார்மோன் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. சிறுநீரகங்களில் கால்சியம் செயலாற்றுவதில் இடையூறை ஏற்படுத்தி, அவற்றை உடலில் தக்க வைப்பதையும், கால்சியத்தை குடல் கிரகிப்பதையும் கேஃபின்(caffeine) கடினமாக்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இருப்பினும், இந்த விளைவுகள் குறைவாகவே இருக்கும்.
ஆனால் எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு caffeine அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். எலும்பு வளர்சிதை மாற்றத்தில் இடையூறை ஏற்படுத்தி, எலும்பு வலு இழப்புக்கு கேஃபின் வழிவகுத்துவிடும் என ஆஸ்டியோபோரோசிஸ் இண்டர்நேஷனல் எனும் ஆய்விதழில் வெளியான ஓரு ஆய்வு கூறுகிறது. கேஃபின் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதனால், நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறும்.
Also Read : காபி Vs டீ – எது பெஸ்ட்? ஒரு நாளைக்கு எத்தனை கப், எந்த நேரத்தில் குடிக்கலாம்?
பி வைட்டமின்கள்
சிறுநீரக செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்து வளர்சிதை மாற்றத்தில் காபி தாக்கம் செலுத்தும். அதிகமாக காபி குடிப்பதால் (நாள் ஒன்றுக்கு 4 கப்புகள் அல்லது அதற்கும் மேல்) கழிவுகள் அதிகமாக வெளியேறும், அதனால் பி வைட்டமின்கள் போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் இழப்பு ஏற்படும். பி வைட்டமின்கள் நீரில் கரையக்கூடியவை. எனவே அவை உடலில் சேகரிக்கப்படாது. இதன் காரணமாக அதிகப்படியான இந்த வைட்டமின்கள் சிறுநீராக வெளியேறிவிடும்.
புரோபயோட்டிக்
பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்டுகள் நிறைந்த புரோபயோட்டிக் உணவுகள், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு அளிக்கின்றன. ப்ரோபயோட்டிக்கில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மிகுந்த வெப்ப உணர்திறன் கொண்டவை. இதனால் காபி போன்றவற்றில் உள்ள சூடு, அந்த பாக்டீரியாக்கள் இரைப்பை குடலில் உயிர் வாழும் திறனைக் குறைத்துவிடும். புரோபயோட்டிக் உணவை எடுத்துக்கொள்வதற்கு முன்போ அல்லது பிறகோ காபி குடிப்பதற்கு ஒரு மணி நேர இடைவெளி தேவை.

காபிக்கு பதிலாக தேநீர் அருந்துவது நல்லதா?
காபிக்கு பதிலாக தேநீர் அருந்தலாமா என்ற கேள்வி இந்நேரம் உங்களுக்குள் தோன்றியிருக்கும். இங்கு கூறப்பட்டுள்ள சில தகவல்கள் தேநீருக்கும் பொருந்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உண்மையில் தேநீரில் உள்ள பாலிஃபெனால், ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதில் ஒரே மாதிரியான விளைவுகளைக் கொண்டிருக்கிறது என்கிறார் பேராசிரியர் எமிலி ஹோ. எனவே, ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவது குறித்து நீங்கள் கவலை கொண்டிருந்தால், எப்போது தேநீர் அருந்த வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவதும் முக்கியம்.
Disclaimer: This information is not intended to be a substitute for professional medical advice, diagnosis or treatment and is for information only. Always seek the advice of your physician or another qualified health provider with any questions about your medical condition and/or current medication. Do not disregard professional medical advice or delay seeking advice or treatment because of something you have read here.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry