
இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிலர் தூங்குவார்கள். சிலர் குளிப்பார்கள். சிலர் புகைபிடிப்பார்கள். ஆனால் இரவு உணவுக்குப் பிறகு இது போன்ற சில விஷயங்களை செய்யவே கூடாது. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். இவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. இரவு சாப்பிட்ட உடன் நடக்கும் போது கைகளுக்கும், கால்களுக்கும் இரத்தம் வேகமாகப் பாய்வதால் செரிமானம் தாமதமாகவே நடைபெறுகிறது. அதனால் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்ய வேண்டாம். ஒரு மணி நேரம் கழித்து நடக்கலாம். அது நல்லது. இரவு சாப்பிட்டதும் உடற்பயிற்சி செய்வதும் கண்டிப்பாக நல்லதல்ல. இதனாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
Also Read : வெண்டைக்காயின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்! Crispy Lady Finger Roast Recipe: Easy and Delicious!
நம் உடலுக்கு தண்ணீர் தேவை. ஆனால் அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிக்கவே கூடாது. குறைந்தது 30 முதல் 60 நிமிடங்களுக்குப் பிறகு குடிக்கலாம். இல்லையெனில், அந்த நீர் செரிமான அமைப்பின் வேலையைத் தடுக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.
இரவு உணவு சாப்பிட்ட உடனேயே வாழைப்பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு உணவிற்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால் வயிறு உப்புசமாகும். வாயு பிரச்சனைகள் ஏற்படும். மேலும், இரவு உணவும் சரியாக ஜீரணமாகாது.
இரவு சாப்பிட்ட உடனேயே பல் துலக்கும் பழக்கமும் பலருக்கும் உண்டு. ஆனால் அதை செய்யக்கூடாது. இதனால் பற்களில் உள்ள எனாமல் அடுக்கு பாதிக்கப்படுவதால், பற்கள் இயற்கையான பொலிவை இழக்கும். எனவே இரவு உணவு உண்ட உடனே பல் துலக்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் பல் துலக்க வேண்டும்.
இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக புகைபிடிக்கக்கூடாது, எந்த நேரத்திலும் புகைபிடிக்கக்கூடாது. அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். மேலும் இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியாதவர்கள் இரவு உணவையாவது நிறுத்துவது நல்லது. ஏனெனில் இரவு உணவிற்குப் பிறகு புகைபிடிப்பது சாதாரண நேரத்தில் புகைபிடிப்பதை விட புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
பலர் இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடிப்பார்கள். நைட் ஷிப்ட்டில் பணி செய்பவர்கள் டீ, காபி குடிப்பது இன்னும் அதிகம். இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால், செரிமானம் பாதிக்கப்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படும். உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது. முக்கியமாக இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படாது. எனவே சாப்பிட்ட உடனேயே காபி, டீ குடிக்க வேண்டாம்.
சாப்பிட்ட உடனேயே குளித்தாலும், உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமானம் சீராக நடைபெறாது. இரவு உணவு உண்ட உடனே தூங்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை அதிகரித்து, உண்ணும் உணவு கொழுப்பாக மாறும். எனவே உடல் எடை கூடும். அதனால் படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டுவிடுங்கள்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry