வயநாடு நிலச்சரிவு! இஸ்ரோ புகைப்படங்களால் வெளியான பகீர் உண்மை! எச்சரிக்கையை புறக்கணித்ததா கேரள அரசு? 86,000 சதுர மீட்டர் நிலம் குளோஸ்!

0
242
High resolution images taken by Indian satellites show the widespread damage and devastation caused by landslides in Kerala's Wayanad. The before and after images show that about 86,000 square meters of land slipped and the debris flowed for about 8 kilometers along the Iruvaiphuzha river. 

வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவு குறித்து இதுவரை வெளியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் சொல்லாத உண்மைகளை, இஸ்ரோ செயற்கைக்கோள்களால் (ISRO Satellites) எடுக்கப்பட்ட ஹை ரெசல்யூஷன் புகைப்படங்கள் (High resolution images) சொல்கின்றன. வயநாட்டில் உள்ள சூரல்மலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவின் செயற்கைக்கோள் படம் மற்றும் தாக்க வரைபடத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (National Remote Sensing Center) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமாகும். இதன் மிக உயர்ந்த தெளிவுத்திறன் (Highest resolution) கொண்ட கார்டோசாட்-3 ஆப்டிகல் செயற்கைக்கோளையும் (Cartosat-3 optical satellite), மேகக்கூட்டத்தின் வழியாக பார்க்கும் திறன் கொண்ட ரிசாட் செயற்கைக்கோளையும் (RISAT satellite) பயன்படுத்தி இந்தப் புகைப்படங்களை இஸ்ரோ எடுத்துள்ளது.

A satellite image released by NRSC showing Chooralmala in Wayanad district of Kerala before the landslides. (NRSC/ISRO)

கடல் மட்டத்தில் இருந்து 1550 மீட்டர் உயரத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதே இடத்தில் நிலச்சரிவுக்கான ஆதாரம் இருந்ததாகவும் இஸ்ரோ கூறுகிறது. 2023ஆம் ஆண்டு இஸ்ரோ தயாரித்த ‘இந்தியாவின் நிலச்சரிவுகளுக்கான அட்லஸ்’ (Landslide Atlas of India) ஆனது கேரளா வயநாடு பகுதியை நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக மாற்றியுள்ளது. அதாவது வயநாடு நிலச்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதியாக இருக்கிறது என்கிற எச்சரிக்கை கடந்த ஆண்டே விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் லேண்ட்ஸ்லைட் அட்லஸ் ஆஃப் இந்தியா என்பது, 20 ஆண்டுகளில் நிகழ்ந்த 80,000 நிலச்சரிவுகளை ஆவணப்படுத்துகிறது. இந்த ஆவணத்தின்படி புதுமலை, வயநாடு மாவட்டம் மற்றும் கேரளாவின் பெரும்பகுதிகள் நிலச்சரிவுகளுக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக (Being prone to landslides) கணிக்கப்பட்டு “சிவப்பு நிறத்தில்” குறிக்கப்பட்டும் உள்ளன.

A satellite image released by NRSC showing Chooralmala in Wayanad district of Kerala before the landslides. (NRSC/ISRO)

இஸ்ரோ செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட படங்கள் வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பேரழிவை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. பேரழிவுக்கு முன்னர் மே 22, 2023 அன்று கார்டோசாட் வெளியிட்ட மூன்று படங்களும், நிலச்சரிவுக்குப் பிறகு புதன்கிழமை RISAT (ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள்) மூலம் ஒரு படமும் வெளியிடப்பட்டுள்ளன. 2024 ஜூலை 31 ஆம் தேதியன்று, உயர் தெளிவுத்திறனில் எடுக்கப்பட்ட ரிசாட் சார் புகைப்படங்கள் (RISAT SAR Images) க்ரவுன் ஸோனில் (Crown Zone) இருந்து ரன் அவுட் ஸோனின் (Run out zone) இறுதி வரை குப்பைகள் எந்த அளவிற்கு சரிந்துள்ளது என்பதன் முழு அளவை காட்டுகின்றன.

Drone image of Chooralmala in Wayanad district of Kerala, on August 1, 2024. | Photo Credit: The Hindu

இஸ்ரோவின் கூற்றுப்படி, தற்போதைய நிலச்சரிவும், முந்தைய நிலச்சரிவு ஏற்பட்ட இடமும் ஒன்றுதான். இந்த சரிவின் தோராயமான நீளம் 8 கி.மீ. ஆகும். இந்த நிலச்சரிவின் முக்கிய ஸ்கார்ப்பின் அளவு – 86,000 சதுர மீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் நழுவி உள்ளது. இதனால் ஏற்பட்ட “குப்பைகள்” கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே பாய்ந்து, நகரங்களையும் குடியிருப்புகளையும் சர்வநாசம் செய்துள்ளது. வயநாட்டில் தொடர்ச்சியான முறையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 325க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

நிலச்சரிவானது இருவாணிப்புழா ஆற்றின் போக்கை விரிவுபடுத்தி கரைகளை உடைத்துள்ளது. இதன் விளைவாக கரையோரங்களில் இருந்த வீடுகள் உள்பட பிற உள்கட்டமைப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இணையத்தில் வயநாடு நிலச்சரிவு குறித்த “முன்னும் – பின்னும்” புகைப்படங்கள் தற்கால சூழ்நிலைகளை குறித்த உண்மைகளை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, ஆனால் இஸ்ரோவின் புகைப்படங்கள் கடந்த கால எச்சரிக்கை மற்றும் வருங்கால முன்னெச்சரிக்கை குறித்த உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry