முகப்பொலிவை அதிகரிக்க வேண்டுமா? சருமப் பாதுகாப்புக்கான அட்டகாசமான 20 டிப்ஸ்!

0
114

சருமப் பாதுகாப்பில் பலரும் கூடுதல் கவனம் செலுத்தும் காலம் இது. கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள், சருமத்திற்கு தற்காலிக பொலிவை கொடுக்கும். இயற்கையான வழிகளில் சருமத்தை பாதுகாப்பதே சிறந்தது. இதைப் பற்றி பார்க்கலாம்.

  1. ஒரு கை அளவிற்கு புதினாவை எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து அரைத்து முகம் கை, கால்களில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவவும். இப்பொழுது உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்.
  2. வெள்ளரிக்காயை, சர்க்கரையுடன் அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அதனை முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும். முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும்.
  3. தேன் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்தால் இறந்த செல்களால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
  4. கடலை மாவு மற்றும் தயிரை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள துவாரங்கள் மறையும். அழுக்குகள் படிவதை தடுக்கும்.
  5. முட்டையில் அதிக புரத சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு மட்டுமல்ல, முடி மற்றும் முகத்திற்கு நல்ல பலனை தரும். முட்டையில் வெள்ளைக் கரு மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து அதனை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் எண்ணெய் வடிவது குறையும். சருமம் மினுமினுப்பாகும்.
  6. சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நிரந்தரமாக நீங்கும்.
  7. காபி தூள், எலுமிச்சை சாறு, சர்க்கரை இவற்றை கலந்து முகத்தில் scrub செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண்டிப்பாக இயற்கையாகவே முகத்தில் பொலிவை அதிகரிக்கலாம்.
  8. இரவு தூங்கும் முன் சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்கை நீக்கிய பின், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை துடைத்து, அதன் பின் சில துளிகள் பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி இரவு தூங்கும் முன் தினமும் செய்து வந்தால், பொலிவிழந்து இருக்கும் முகம் பொலிவு பெற்று அழகாக காணப்படும்.
  9. தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்யுங்கள். இது சரும பொலிவை அதிகரிக்க உதவுவதோடு, அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
  10. தினமும் இரவு தூங்கும் முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், சருமம் மென்மையாக இருப்பதோடு, பளிச்சென்று பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.
  11. சிறிது கிளிசரினுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இதனால் கிளிசரின் சருமத்திற்கு நீரேற்றம் அளிக்கும் மற்றும் எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தை பொலிவாக வெளிக்காட்டும்.
  12. முகத்தை முதலில் நீரில் கழுவி உலர வைத்து, பின் முல்தானி மெட்டியை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை இரவு தூங்கும் முன் போட்டால், காலையில் உங்கள் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
  13. மஞ்சள் தூள், சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் ரோஸ் வாட்டரால் முகத்தை ஒருமுறை துடைத்திடுங்கள். மறுநாள் காலையில் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.
  14. சருமம் எந்த இடத்தில் கறுத்திருக்கிறதோ, அந்த இடத்தில் எலுமிச்சைச் சாறுதயிர்தக்காளி பேஸ்ட் அல்லது எலுமிச்சைச் சாறுஉருளைக்கிழங்கு பேஸ்ட் போன்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். எலுமிச்சையிலுள்ள ஆல்ஃபாஹைட்ராக்சில் அமிலம் (Alpha hydroxyl acids), வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் (Citric acid) போன்றவை சரும நிறம் மாற்றமடைவதைச் சரிசெய்யும்.
  15. முகத்தை `பளிச்சென ஆக்குவதற்கு, பலரும் பிளீச்சிங் செய்வார்கள். அதற்கு தேன் சிறந்த தீர்வு. வெறும் தேனையோ, பப்பாளிச் சாறு கலந்த தேனையோ தினமும் சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்தை தேனில் கலந்தும் தேய்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழத்திலிருக்கும் புரோமலைன் (Bromelain) என்ற என்சைம், தோலிலிருக்கும் இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பளிச்சென மாற்றும். அன்னாசிப்பழம்தேன் கலவையை இரண்டு மூன்று முறை தேய்த்துக்கொள்வது நல்லது.
  16. சிலருக்கு கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருக்கும். புளித்த தோசை மாவுடன் தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமத்தைப் (Eventone) பெறலாம். இன்ஸ்டன்ட் பிளீச்சராக ( Instant Bleacher) இது இருக்கும். தக்காளிதயிர் பேஸ்ட், தக்காளிகடலை மாவுகற்றாழை பேஸ்ட் போன்றவை  மிகவும் நல்லவை.
  17. பெண்கள், மஞ்சளுடன் கடலை மாவு சேர்த்து ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டால், வெயிலின் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். தினமும் சோப்புக்குப் பதில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது, சருமம் கருமையடைவதிலிருந்து தடுக்கும்; சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளையும் தடுக்கும்.
  18. தேங்காய்ப்பாலில் அதிக கொழுப்புச்சத்து இருப்பதால், சருமத்துக்கு நீர்ச்சத்து கிடைக்கவும், நிறம் கருமையாவதையும் தடுக்கும். ஆண்கள், கற்றாழைச் சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளலாம். சந்தனத்துடன் தேங்காய்ப்பால் கலந்து, ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது முகப்பொலிவை அதிகரிக்கும். வெயில் காலத்தில் வியர்வை நாற்றத்தால் சிரமப்படுபவர்கள், சந்தனத்தைத் தேய்த்துக்கொண்டாலே அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டுவிடலாம்.
  19. `முகத்துல எண்ணெய் வழியுதுஎன்பவர்கள் கடலை மாவு, ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் ஆக்கி, தினமும் முகத்தில் தேய்த்து வந்தால், அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முகத்தைப் பளிச்சென மாற்றிவிடும்.
  20. தயிர், உடலுக்கு மட்டுமன்றி சருமத்துக்கும் நல்லது. தயிரை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, தக்காளியுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சுப் பழத்தின் தோலை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்தும் பூசலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry