
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். உண்மையில், பாம்புகளின் அழிவுக்கு அவற்றின் மீதான இத்தகைய அச்சமும் பயமுமே முக்கியக் காரணமாக இருக்கிறது. பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 16ம் தேதி(இன்று) உலக பாம்புகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்பு கடிக்கு உள்ளாவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. இதன் காரணமாக ஆண்டொன்றுக்கு 81 ஆயிரம் முதல் 1,38,000 மரணங்கள் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் பாம்பு கடியால் இந்தியாவில்தான் அதிக உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
இந்தியாவில் 2000 முதல் 2019ம் ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்ததாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை, பாம்புகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் தரைத்தளத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் வீடு மலைப்பாங்கான பகுதியிலோ, காடு அல்லது பூங்கா போன்றவற்றுக்கு அருகில் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெயிலில் இருந்து விடுபட மக்கள் மழைக்காலத்தை மிகவும் விரும்புகிறார்கள். இருப்பினும், மழைக்காலமானது தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பாம்புகள் போன்ற சில மிக ஆபத்தான விலங்குகள் வீட்டிற்குள் நுழையும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

குறிப்பாக கிராமங்கள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் வீட்டின் தரை தளத்தில் வசிப்பவர்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், பாம்புகள் மற்றும் பூச்சிகளை வீட்டிலிற்குள் வராமல் தடுப்பதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ளவது அவசியமாகிறது. நீங்கள் தரைத்தளத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் வீடு மலைப்பாங்கான பகுதியிலோ, காடு அல்லது பூங்கா போன்றவற்றுக்கு அருகில் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மழை பெய்தால், கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.
பாம்புகளும் பிற பூச்சிகளும் நம் வீட்டினுள் வராமல் இருப்பதற்கான சில வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.
- வேப்ப எண்ணெய் : வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து, தினமும் வீடு முழுவதும் தெளித்து வந்தால், மூட்டைப்பூச்சிகள் நீங்கும். இந்த தண்ணீரை வீட்டின் தோட்டத்திலும் தெளிக்கலாம்.
- பிளீச்சிங் பவுடர்: பாம்புகள் அல்லது பிற விஷ பூச்சிகள் உங்கள் வீட்டினுள் வராமல் இருக்க பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். வெளியிலும் தோட்டத்திலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் தெளிக்கலாம்.
- இலவங்கப்பட்டை பொடி, வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து வீட்டிற்கு வெளியே தெளிக்கலாம். இவை வீட்டினும் பாம்புகள் வராமல் தடுக்கும்.
- வீட்டில் பாம்புகள் வராமல் இருக்க, ஜன்னல் மற்றும் கதவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு விழுதை தடவலாம். பாம்புகள் இந்த வாசனைக்கு வீட்டினுள் வராது.
- பாம்புகள் சில தாவரங்களுக்கு பயப்படுகின்றன. கற்றாழை, பாம்பு செடி, துளசி மரம், எலுமிச்சை புல் போன்றவற்றை பருவமழையின் போது கண்டிப்பாக நட வேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் இந்த செடிகளை நட வேண்டும். இந்த செடிகளின் வாசனையால், பாம்புகள் வீட்டின் அருகே வராது.
வீடுகளின் அருகில் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குப்பைகள் இருந்தால் எலி வரும். எலி வந்தால் அவற்றைத் தேடி பாம்புகள் வரும். வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வீடுகளில் ஓட்டை போன்றவை இருந்தால் அவற்றை அடைத்து வைக்க வேண்டும். வீட்டின் கழிவு நீர் குழாய்களை வலைபோன்ற அமைப்பின் மூலம் மூடி வைக்கவேண்டும். இரவு நேரங்களில் வீடுகளைச் சுற்றி வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் வீடுகளுக்கு வெளியே குளியலறை, கழிவறை இருந்தால் அவற்றை சுத்தமாகவும் வெளிச்சத்தோடு வைத்திருக்க வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry