கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பும், பரவல் தொடங்கிய பின்னரும் இந்தியர்கள் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொண்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Source :- Lancet Regional Health-Southeast Asia – Consumption of systemic antibiotics in India in 2019
உலகின் முன்னணி மருத்து ஆய்வு இதழான ‘லான்செட்’ (Lancet Regional Health-Southeast Asia) செப்டம்பர் 1 தேதியிட்ட இதழில், உலக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்தின் பயன்பாடு குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியிருக்கிறது.
‘அசித்ரோமைஸின் போன்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை இந்தியர்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்கின்றனர். குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பும், பரவலின்போதும் இந்தப் பயன்பாடு அதிகமாக இருந்தது’ என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வரையறுக்கப்பட்ட தினசரி அளவு (டிடிடி) என்ற அடிப்படையில், தனிநபர்களின் ஆன்டிபயாட்டிக் பயன்பாடு இதில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்து அசித்ரோமைஸின் ஆகும். அதற்கு அடுத்த இடத்தில் சிஃபிக்ஸைம் மருந்து இடம்பெற்றிருக்கிறது.
Also Read : காரின் பின் சீட்டில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்! தவறினால் ரூ.1000 அபராதம்!
பெரும்பாலும் மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறியிருக்கும் அந்த அறிக்கை, இந்த விஷயத்தில் கொள்கை மற்றும் ஒழுங்குமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆன்டிபயாட்டிக் மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகவும், பொருத்தமற்ற வகையிலும் பயன்படுத்துவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்துவிடும். இந்தியாவில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருப்பதால், லான்செட் இதழில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry