ராக்கெட் வேகத்தில் உயரும் நூல் விலை! கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு!

0
75

கொரோனா பாதிப்பால் கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி முடங்கியிருந்த நிலையில் தற்போது மெல்ல சீராகி வருகிறது. இந்த மாவட்டத்தில் சுமார் 400 ஏற்றுமதியாளர்கள் உள்ள நிலையில், நூல் விலை ஏற்றத்தால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

Also Read : வரைமுறையின்றி ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் இந்தியர்கள்! மருத்துவ இதழ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

நூல் விலை ஏற்றமானது கரூர் மாவட்டத்தை மட்டுமல்ல திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் ஜவுளி ஏற்றுமதி தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் ஸ்டீபன் பாபு, “கரூர் மாவட்டத்தில் ஜவுளி ஏற்றுமதி தொழிலானது பிரதானமாக உள்ளது. வேலைவாய்ப்பு அதிகமாக வழங்கக்கூடிய இந்தத் தொழில் மூலம், நேரடியாக ஒன்றரை லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக ஒரு லட்சம் தொழிலாளர்களும் பயன்பெறுகின்றனர்.

நூல் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலையானது நான்கு மாதங்களுக்கு முன்பு சராசரியாக ஆயிரம் ரூபாய் என்று இருந்த நிலையில், தற்போது 2000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் கரூரை பொறுத்தவரை ஏற்றுமதி ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். மாநில அரசு நூல் விலை சராசரியாக ஆறு மாதத்திற்கு நிலையாக இருக்கும் படி நிர்ணயிக்க வேண்டும். இதற்கு கமிட்டி அமைத்து ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும். ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும். நூல் விலையை கட்டுப்படுத்தாவிட்டால், பல ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்” இவ்வாறு ஸ்டீபன் பாபு கூறினார்.

Also Read : சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கீரை வரப்பிரசாதமா? இன்சுலின் கீரையில் இன்சுலின் இருக்கிறதா? சுவாரஸ்ய தகவல்!

கரூர் மாவட்டத்தில் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150 நூல் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பெட்ஷீட்டுகள், திரைச்சேலைகள், மிதியடிகள், தரைவிரிப்புகள், குஷன்கள் போன்றவை இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry