சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கீரை வரப்பிரசாதமா? இன்சுலின் கீரையில் இன்சுலின் இருக்கிறதா? சுவாரஸ்ய தகவல்!

0
128

இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது.

இன்சுலின் செடியின் 2 இலைகளை சர்க்கரை நோயாளிகள் தினமும் பச்சையாக காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. மாதவிடாயை முறைப்படுத்துகிறது. கருப்பை நீர் கட்டிகளையும் இதன் கஷாயம் குணப்படுத்துகிறது. இந்த இன்சுலின் செடியில் உள்ள சோடியம் நம்முடைய உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருப்பதோடு இதிலுள்ள ரைசோம் சிறுநீரகத்தை ஆரோக்கிய வைத்திருக்க உதவுகிறது. சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Also Read : சாப்பிட்டுவிட்டு 2 நிமிடம் நடந்தா போதும்! கட்டுப்பாட்டுக்குள் வரும் சர்க்கரை அளவு!

உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படும் போது அதற்கு இந்த இன்சுலின் இலை மருந்தாக அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நமைச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை உடல் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிக்கும் இயல்பு கொண்டது. முதலில் கண்களை பாதிக்கும். பின்னர் நரம்புகளை பாதிக்கும். எனவே சர்க்கரை நோய்க்கு இந்த இன்சுலின் இலைகள் சிறந்த மருந்தாகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இன்சுலின் இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read : எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்!

இந்நிலையில், ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பி.எஸ். வெங்கட் 3 ஏக்கர் பரப்பில் இன்சுலின் செடிகளை வளர்த்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “8 வருடங்களுக்கு முன்பு கலிப்போர்னியாவில் உள்ள சீனியர் சிட்டிசன் ஹோமுக்கு சென்றேன். அப்போது தான் இந்த இன்சுலின் செடியை பார்த்தேன். அங்கு உள்ள முதியோர்கள் தினமும் இந்த இலையை சாப்பிட்டு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து இருப்பதை அறிந்தேன்.

நாடு திரும்பியதும் இயற்கை விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாரின் புத்தகங்களை படித்தேன். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது. அந்த இன்சுலின் செடியை தமிழகத்தில் “சுருள் இஞ்சி கீரை” என்று அழைக்கிறார்கள். கேரளா மாநிலம் பாலக்காடு நல்லம்பள்ளியிலிருந்து இன்சுலின் கீரை செடிகளை வாங்கி வந்தேன். இங்கே 3 ஏக்கர் நிலபரப்பில் உள்ள பண்ணையில் சுமார் 50 ஆயிரம் செடிகளை உற்பத்தி செய்து 10,000க்கும் மேற்பட்டோரை சர்க்கரை நோயில் இருந்து காப்பாற்றி வருகிறேன்.

இந்த செடியில் மூன்று ரகங்கள் உள்ளது. இதில் முதல் தரமான “காஸ்டஸ் பிக்டஸ்” என்ற செடியை தான் அனைவருக்கும் கொடுத்து வருகிறோம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பச்சை இலைகளை அனுப்புகிறோம். இன்சுலின் இலையை பவுடர் ஆக்கி, அமெரிக்கா, லண்டன், துபாய் போன்ற 15க்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். உணவுப் பாதுகாப்பு உட்பட அனைத்து பாதுகாப்பு சான்றிதழ்களும் உள்ளன.

Also Read : பள்ளிக்குள் மதப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவது உரிமையாகுமா? ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி!

சுமார் 45 நாட்கள் இந்த இலையை நாளொன்றுக்கு 2 வீதம் காலை மாலை சாப்பிட்டால் சுகர் கட்டுக்குள் வருகிறது. சிறிதும் பக்க விளைவுகள் இல்லை. வெற்றிலை போல மென்று இன்சுலின் கீரை இலைகளை சாப்பிடலாம் அல்லது 150 மி.லி. நீரில் இலையை கிள்ளிப் போட்டு, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த சாறை குடிக்கலாம். பச்சடி, சாம்பார் என எதில் வேண்டுமானாலும் போட்டு சாப்பிடலாம்.

இந்த இலையில் இன்சுலின் இல்லை, உடலில் இன்சுலின் உருவாக்கவில்லை என்பது சுவாரஸ்யமானது. ஆனால் இந்த இலையில் உள்ள இயற்கை ரசாயனங்கள் சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றுவதால் இது வளர்சிதை மாற்ற செயல்முறையை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry