எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்! Vels Exclusive!

0
291

2.30 minutes Read : சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதால் மட்டும் ஆரோக்கியம் மேம்பட்டுவிடுமா? என்றால் இல்லை. உணவை எப்போது?, எப்படி? உண்ண வேண்டும் என்பது முக்கியம். சத்தான உணவுகளை தவறான நேரத்தில் சாப்பிடும்போது, உடலில் நச்சுகள் சேர்ந்து நலம் பாதிக்ப்படும். உணவு குறித்து ஆயுர்வேதம் நமக்கு வரையறுத்துக் கொடுத்துள்ளதை பொதுவாகப் பார்க்கலாம்.

95% நோய்கள் வயிற்றை மையமாகக் கொண்டே உருவாகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. ‘உணவே மருந்து’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே, ஆரோக்கியமும், ஆரோக்கிய சீர்கேடும் இருக்கிறது.

சூரிய உதயத்திற்குப் பிறகு – சூரிய அஸ்தமனத்துக்கு முன்பான இடைப்பட்ட நேரமே, உணவு உண்பதற்கான சரியான காலமாகும். ஜீரணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த கால அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Also Read : வீடுகளில் எளிதாக வளர்க்கக்கூடிய அவசியமான மூலிகைகள்! மருத்துவ பயன்களுடன் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

சூரிய உதயத்திற்குப் பிறகுதான் நமது உடலில் ஜீரண செயல்முறை முழுமையாகத் தொடங்கும். சூரியன் உச்சத்தில் இருக்கும்போது (12 NOON – 2PM) ஜீரண மண்டலம் முழுவீச்சில் செயல்பாட்டில் இருக்கும். சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கும்போது ஜீரண மண்டல செயல்பாட்டின் வேகமும் குறையத் தொடங்கிவிடும். சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உண்ணும் உணவுகள் முறையாக, முழுமையாக ஜீரணம் ஆகாது. இதனால் உடலில் நச்சுகள் தேங்க ஆரம்பித்து, உபாதைகளை கொடுக்கும்.

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறது பால் மட்டுமே பருகலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பாக பால் பருக வேண்டும். இரவு நேரத்தில்தான் பாலை ஜீரணிக்கக் கூடிய லாக்டேஸ் என்ஸைம் நம் உடலில் சுரக்கும். பால், தூக்கத்தைத் தூண்டி, நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே இரவில் பால் குடிப்பது உத்தமம்.

Also Read : சாப்பிட்டுவிட்டு 2 நிமிடம் நடந்தா போதும்! கட்டுப்பாட்டுக்குள் வரும் சர்க்கரை அளவு!

உணவு உண்பதற்கான வரையறையை நாம்தான் வகுத்துக்கொள்ள வேண்டும். தற்போது பிரபலமாக உள்ள இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங் (12 – 16 மணி நேரம் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது) என்பதும், ஆயுர் வேதம் பரிந்துரைப்பதும் சற்றேறக்குறைய ஒன்றுதான். தற்போதைய Intermitent Fasting பக்க விளைவுகள் இல்லாமல் உடல் எடையை குறைக்க பெருமளவு உதவுகிறது. அதேநேரம் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுமுறையில், உடல் – மூளை – ஆன்மாவுக்கு மிகச்சிறந்த அளவு ஊட்டம் கிடைக்கும்.

காலை உணவை அரசரைப் போல, அதிக ஊட்டமுள்ள போஷாக்கான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய உணவை இளவரசரைப்போல சாப்பிட வேண்டும். பொதுவாக இளம் வயதினருக்கு ஜீரணிக்கும் சக்தி அதிகமிருக்கும் மற்றும் சூரியனும் உச்சத்தில் இருக்கும். எனவே மதிய உணவாக, சமமான சத்துக்கள் நிறைந்த கடினமான உணவுகளைக்கூட எடுக்கலாம். இரவு உணவைப் பொறுத்தவரை, ஏழைகள் உண்பது போல இருக்க வேண்டும். மிக மிதமான உணவு.

Also Read : பல் துலக்காம தண்ணி குடிக்கலாமா? மருத்துவர்கள் என்ன சொல்றாங்க?

அப்படியானால் மூன்று வேளையும் என்ன சாப்பிடலாம் என்ற கேள்வி எழும். காலை உணவை பழங்களுடன் தொடங்க வேண்டும். தானியங்கள், காய்கறிகள், புரத உணவுகள், நட்ஸ்கள்(பாதாம், பிஸ்தா, வால்நெட் உள்ளிட்டவை) போன்றவை உள்ளடக்கியதாக காலை உணவு இருக்க வேண்டும். மதிய உணவு நேரம் என்பது மதியம் 12 மணி முதல் 2 மணி வரை. பச்சை காய்கறி சலாட் உடன் மதிய உணவை தொடங்க வேண்டும். பீன்ஸ் வகை காய்கள், பயறு வகைகள், தயிறு அல்லது மோர் உள்ளிட்டவை அடங்கியதாக இருத்தல் அவசியம். ஒரு நாளில் அதிக அளவு எடுக்க உகந்தது மதிய உணவுதான். இரவைப் பொறுத்தவரை சூப்கள் அருந்தலாம். அல்லது, சமவிகித சத்துகள் கொண்ட சமைத்த உணவோடு, அதிகபட்சம் ஒரு பவுல் அரசி சாதம் சாப்பிடலாம்.

GETTY IMAGE

இரவு நேரங்களில் வாழைப்பழம், தயிர், வெள்ளரி, முள்ளங்கி போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளுமைக் குணம் கொண்ட இவைகளை, இரவு நேரத்தில் ஜீரணிக்கும் சக்தி நமது உடலுக்கு இருக்காது. அல்லது ஜீரண மண்டலத்தில் வேலை அதிகமாகும்.
பொதுவாக சாத்வீக உணவுகள், உள்ளூரில்(அதிகபட்சம் 100கி.மீ. சுற்றளவு) அந்தந்த சீசனில் கிடைக்கக் கூடிய ஃப்ரெஷ்ஷான பழம் – காய்கறிகள், சுவையான உணவுகளை சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும், அதற்கே முன்னுரிமை தர வேண்டும்.

உணவுகளின் குணங்களைக் கொண்டு ஆயுர்வேதம் அவற்றை மூன்றாக பிரிக்கிறது. சாத்வீக உணவுகள், இராஜச உணவுகள், தாமச உணவுகள். காய் – கனிகள், நட்ஸ்கள், விதைகள், பால்பொருட்கள், தானியங்கள், பட்டாணி, மொச்சை போன்றவை சாத்வீக உணவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இராஜச உணவென்பது, சாத்வீக உணவுகளை உப்பு, காரம், சர்க்கரை தூக்கலாக கொண்டு சமைத்து, குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ சாப்பிடுவது. இந்தவகை உணவுகள் மூளையை அமைதியற்ற நிலையில் வைக்கும். தாமச உணவுகள் என்பது, அறியாமையால் உண்ணும் உணவுகள். அசைவம், பதப்படுத்தும் ரசாயனத்துடன் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பண்டங்கள், உறைந்த உணவுகள் (Frozen Foods), நாட்பட்ட உணவுகள், உணர்ச்சியை தூண்டக்கூடிய உணவுகள் ஆகியவை தாமச உணவுகள் ஆகும். அதாவது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிதைவை ஏற்படுத்தும் உணவுகள் என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

GETTY IMAGE

சத்தான சமவிகித உணவு சரி, எந்த அளவு சாப்பிட வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். இதற்கான விடையை உங்கள் வயிறே சொல்லிவிடும். ஜீரணிக்க போதுமான அளவு எடுத்துக்கொண்டவுடன், உங்கள் வயிறே சிக்னல் கொடுக்கும். அத்தோடு நிறுத்திக்கொள்வது சிறப்பு. தன்னுணர்வுடன், கவனத்தை உணவின் மீது வைத்து மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் வயிறு தரும் சிக்னலை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். டி.வி. பார்த்துக்கொண்டோ, ஃபோன் பேசிக்கொண்டோ அல்லது பார்த்துக்கொண்டோ, கும்பலாக அமர்ந்து பேசிக்கொண்டோ சாப்பிடும்போது, சாப்பிடும் அளவு அதிகமாகிவிடும். அளவாகச் சாப்பிட்டால் நிறைவாக வாழலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry